பெருவழுதி சங்ககாலப் புலவர். கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி ஓர் அரசன். அவனது அண்ணன் ஒரு புலவர். பெருவழுதியின் பாடல்கள் இரண்டு உள்ளன. அவை: நற்றிணை 55, 56.

பாடல் சொல்லும் செய்தி தொகு

கண்கோளாக நோக்கல் தொகு

அவன் அவளை ஆரத் தழுவினான். அவன் மார்பில் இருந்த சந்தனமும், மலர் மணமும் அவளது உடலில் ஒட்டிக்கொண்டன. அதனை அறுகால் பறவைகள் (பூவில் மொய்க்கும் கொசுக்கள்) மொய்த்தன. அதனைக் கண்கொட்டாமல் பார்த்த அவளது தாய் முன்பெல்லாம் இப்படி மொய்க்கவில்லையே! என்றாள். அவள் என்னை(தோழியை)ப் பார்த்தாள். நான் சந்தனக் கட்டையைப் புகையைச் செய்துவிட்டு அதனைக் காட்டி இதனால்தான் என்று தாய்க்குக் காட்டினேன். அவன் சிறைப்புறமாக இருக்கும்போது அவனுக்கு உரைப்பாளாய்த் தோழி இதனைக் கூறுகிறாள். - நற்றிணை 55

ஒருங்கு வரல் தொகு

சிறுசிறு குரவம் பூக்களின் மணம் கமழும்போது அன்று சொன்னாள். பொருள்தேடச் சென்றால் நானும் வருகிறேன் என்றாள். நான் அவளை விட்டுவிட்டு வந்துவிட்டேன். அவள் மேனியில் இப்போது பொன்னிறம் பூத்திருக்கும். அதனை இப்போது தோழியிடம் காட்டி இந்த நோய் போகமாட்டேன் என்கிறது என்று கூறி வருந்திக்கொண்டிருப்பாளோ? - தலைவன் தலைவி நிலையை இவ்வாறு நினைத்துப் பார்க்கிறான். - நற்றிணை 56

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருவழுதி&oldid=3198653" இலிருந்து மீள்விக்கப்பட்டது