பெரு வஞ்சி
தமிழ் இலக்கணத்தில் பெரு வஞ்சி என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். தொல்காப்பியத்தில் கூறப்படாத இத்துறை பிற்காலத்தில் எழுந்த புறப்பொருள் வெண்பாமாலையில் வஞ்சித் திணையின் ஒரு துறையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. வலிமை கெட்டுப்போனாலும் பகை மன்னர் தன் முன் பணியாததால் கோபமடையும் மன்னன் அவர்களது நாட்டை மீண்டும் கொளுத்துவது "பெரு வஞ்சி" என்று பெயர் பெறும்.
இதனை விளக்க, தன் முன் பணியாதவர்களது வளம் பொருந்திய நாட்டைச் சினங்கொண்ட மன்னன் மீண்டும் எரியூட்டுவது[1] என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.
- முன்அடையார் வளநாட்டைப்
- பின்னரும்உடன்று எரிகொளீஇயன்று
எடுத்துக்காட்டு
தொகு- பீடுலா மன்னர் நடுங்கப் பெரும்புகை
- ஊடுவலாய் வானத்து ஒளிமறைப்ப - நாடெலாம்
- பின்னும் பிறங்கழல் வேந்தனெபெய் கழற்கால்
- மன்னன் கனல மறம்
- - புறப்பொருள் வெண்பாமாலை 53.
குறிப்பு
தொகு- ↑ இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பக். 91, 92
உசாத்துணைகள்
தொகு- இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
- கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.