பெரோபோரான்

இரும்பின் கலப்புலோகம்

பெரோபோரான் (Ferroboron) FeB என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கலப்புலோகமாகும். இரும்பும் போரானும் சேர்க்கப்பட்டு இந்த பெரோகலப்புலோகம் உருவாக்கப்படுகிறது. பெரும்பாலும் இரும்புடன் 17.5% முதல் 20% வரையிலான போரான் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் இக்கலப்புலோகம் போரான் எஃகு தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. [1]

பெரோபோரான் உலோகக் கலவையின் சிஏசு எண் 11108–67-1 ஆகும். [1]போரிக் அமிலத்தை கார்பன் எஃகுடன் சேர்ந்து மின்சார வில் உலையில் உயர்வெப்பக்கார்பன் வினை மூலம் குறைப்பதன் மூலமாகவோ அல்லது இரும்பு முன்னிலையில் போரிக் அமிலத்தை உயர்வெப்ப அலுமினியம் வினை மூலம் குறைப்பதன் மூலமாகவோ பெரோபோரான் தயாரிக்கப்படுகிறது.[1]

C-Mn மற்றும் பிற குறைந்த கடினத்தன்மை கலப்புலோகங்களுடன் கடினத்தன்மையை மேம்படுத்த பெரோபோரான் சேர்க்கப்படுகிறது. மேலும் எஃகு மற்றும் NdFeB காந்தங்கள் உற்பத்தியிலும் பெரோபோரான் நைட்ரசன் துப்புரவுக்கும் பயன்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Ferroboron - Properties, Applications", AZo Marerials, August 26, 2013, பார்க்கப்பட்ட நாள் May 9, 2018
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரோபோரான்&oldid=3078963" இலிருந்து மீள்விக்கப்பட்டது