பெர்கோபால்டேட்டு
பெர்கோபால்டேட்டுகள் (Percobaltates) என்பவை ஆக்சிசனேற்ற நிலை +5 என்ற மதிப்பைக் கொண்ட கோபால்ட்டின் வேதிச்சேர்மங்களைக் குறிக்கிறது. கோபால்ட்டின் அதிகபட்ச ஆக்சிசனேற்ற நிலையும் இதுவேயாகும். இவற்றில் மிக எளிய பெர்கோபால்டேட்டாக சோடியம் பெர்கோபால்டேட்டு (Na3CoO4) போன்ற இரட்டை உலோக தொகுதி 1 ஆக்சைடு கருதப்படுகிறது. கோபால்ட்(II,III) ஆக்சைடுடன் சோடியம் ஆக்சைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் இவற்றைத் தயாரிக்கலாம். இவ்வினையில் ஆக்சிசன் ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.
- 4 Co3O4 + 18 Na2O + 7 O2 → 12 Na3CoO4
பொட்டாசியம் பெர்கோபால்டேட்டு உப்பும் இதே முறையில் தயாரிக்கப்படுகிறது. கோபால்ட்(V) இவ்வுப்பில் உள்ளது என்பதை இவ்வுப்பின் காந்த இயக்கம் உறுதிசெய்கிறது[1][2]
கரிம உலோக Co(V) அணைவுகள் பலவும் உருவாவதாகவும் அறியப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Brendel, Claus; Klemm, Wilhelm (January 1963). "Weitere Versuche zur Darstellung von Kaliumcobaltat (V)" (in German). Zeitschrift für anorganische und allgemeine Chemie 320 (1-4): 59–63. doi:10.1002/zaac.19633200109.
- ↑ D. Nicholls (2 October 2013). The Chemistry of Iron, Cobalt and Nickel: Comprehensive Inorganic Chemistry. Elsevier Science. pp. 1107–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-4643-0.