பெர்கோவ் வினை
பெர்கோவ் வினை (Perkow reaction) என்பது ஒரு டிரை ஆல்க்கைல்பாசுப்பைட்டு எசுத்தர் ஓர் ஆலோகீட்டோனுடன் வினைபுரிந்து ஒரு டை ஆல்க்கைல் வினைல் பாசுபேட்டாகவும் ஓர் ஆல்க்கைல் ஆலைடாகவும் உருவாகும் கரிம வேதியியல் வினையாகும் [1].
பெர்கோவ் வினை | |
---|---|
பெயர் மூலம் | வெர்னர் பெர்கோவ் |
வினையின் வகை | பிணைப்பு வினை |
இனங்காட்டிகள் | |
RSC சுட்டெண் | RXNO:0000183 |
இவ்வினையுடன் தொடர்புடைய மைக்கேலிசு-அர்புசோவ் வினையிலும் இதே வினைபடு பொருள்கள் வினைபுரிந்து ஒரு பீட்டா-கீட்டோ பாசுபோனேட்டைத் தருகின்றன. ஆல்க்கீன்கள் தயாரிக்கும் ஓர்னர்-வேட்சுவொர்த்-எம்மான்சு வினையில் இவ்விளைபொருள் ஒரு முக்கியமான வினைப்பொருள் ஆகும். இதனடிப்படையில் நோக்கினால் இவ்வினை பெர்கோவ் வினையினுடைய பக்க வினையாகக் கருதப்படுகிறது.
வினை வழிமுறை
தொகுபெர்கோவ் வினையின் வினை வழிமுறையில் கார்பனைல் கார்பனில் ஓர் அணுக்கரு நாட்ட கூட்டு வினை நிகழ்ந்து ஓர் இருமுனை அயனி இடைநிலை உருவாகிறது. இவ்வயனி ஆலைடை இழந்து மறுசீராக்கல் அடைவதன் மூலம் நேர்மின் அயனி இனமாக மாறுகிறது. இந்நேர்மின் அயனி இரண்டாவது அணுக்கரு நாட்ட இடப்பெயர்ச்சி வினையின் மூலம் ஆல்க்கைல் நீக்கமடைகிறது. இப்படிநிலையில் பாசுப்பைட்டு ஆல்காக்சைடு பதிலிகளில் ஒன்றை ஆலைடு எதிர் மின்னயனி தாக்கி ஓர் ஈனால் பாசுபேட்டு உருவாகிறது [1]
நோக்கம்
தொகுஒரு புதிய பூச்சி விரட்டியை தயாரிப்பதற்கு பெர்கோவ் வினையை பயன்படுத்தப்படுகிறது. இதற்கு எக்சாகுளோரோ அசிட்டோனும் டிரையெத்தில் பாசுப்பைட்டும் அடிப்படையாகும். இவை பியூரானுடன் கார சோடியம் 2,2,2-டிரைபுளோர்யீத்தாக்சைடின் செயல்பாட்டுடன் இரண்டாம்நிலை [4+3] வளையக்கூட்டு வினையில் பங்கேற்கின்றன.
புதிய குயினோலின் தயாரிப்பிலும் பெர்கோவ் வினையைப் பயன்படுத்த முடியும்.[2] பதிலி என் பியூட்டைலாக இருந்தால் வினை விளைபொருள் பெர்கோவ் கூட்டுவிலைபொருளாக இருக்கும். இவ்வினையில் விடுபடும் குழு எலக்ட்ரான் குறைவு அசைல் குழுவாகும். பதிலி ஒரு பீனைல் குழுவாக இருந்தால் வினையில் பாசுப்பைட்டு முன்னிலை பெற்று அசைல் குழுவானது எத்தில் ஈனால் ஈதராக மாறுகிறது. வினையின் வித்தியாசத்தை விளக்குவதற்கு ஆல்பா-கீட்டோ கார்பன் அணுவின் மீதுள்ள எலக்ட்ரான் அடர்த்தி முக்கியத்துவம் பெறுகிறது.
பெர்கோவ் வினையில் உருவாகும் அரைல் ஈனால் பாசுபேட்டுகளை பாசுபோரைலேற்றும் முகவர்களாக பயன்படுத்த இயலும். உதாரணமாக அடினோசின் மோனோபாசுபேட்டை அடினோசின் டிரைபாசுபேட்டாக மாற்றலாம்[3].
மேற்கோள்கள்
தொகு- ↑ Organophosphorus chemistry. XVII. Kinetics and mechanism of the Perkow reaction Irving J. Borowitz , Steven Firstenberg , Grace B. Borowitz , David Schuessler J. Am. Chem. Soc.; 1972; 94 pp 1623–28; எஆசு:10.1021/ja00760a032
- ^ Perkow, W. Chemische Berichte 1954, 87, 755–758
- ^ Hexachloroacetone as a Precursor for a Tetrachloro-substituted Oxyallyl Intermediate: [4+3] Cycloaddition to Cyclic 1,3-Dienes Baldur Föhlisch and Stefan Reiner Molecules 2004, 9, 1–10 Online Article
- ^ New Modification of the Perkow Reaction: Halocarboxylate Anions as Leaving Groups in 3-Acyloxyquinoline-2,4(1H,3H)-dione Compounds Oldrich Paleta, Karel Pomeisl, Stanislav Kafka, Antonin Klasek, Vladislav Kubelka Beilstein Journal of Organic Chemistry 2005 Online Article
- ^ T. Moriguchi, K. Okada, K. Seio, and M. Sekine. "Synthesis and Stability of 1-Phenylethenyl Phosphate Derivatives and their Phosphoryl Transfer Activity", Letters in Organic Chemistry, 1 (2):140–144, 2004