பெர்டினாண்ட் எய்ன்

ஜேக்கப் கோட்லீப் பெர்டினாண்ட் எய்ன் (Jacob Gottlieb Ferdinand Heine) (மார்ச் 9,1809, ஹால்பெர்ஸ்டாட்-மார்ச் 28,1894) என்பவர் ஒரு செருமனிய பறவையியலாளர் மற்றும் சேகரிப்பாளர் ஆவார்.

19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் எய்ன் மிகப்பெரிய பறவைகளின் தொகுப்பைக் கொண்டிருந்தார். இது ஒரு தனி நபர் சேகரிப்பின் அதிக எண்ணிக்கையிலானது. இந்த சேகரிப்பு இப்போது ஹால்பெர்ஸ்டாடில் உள்ள எய்னியம் ஹால்பெர்ஸ்டாட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது (27,000 மாதிரிகள், 15,000 புத்தகங்கள்).[1] ஜீன் கபனிசு எய்னியம் அருங்காட்சியக. சேகரிப்பைப் பற்றி எழுதியுள்ளார். இவரது மகன் பெர்டினாண்ட் எய்னனும் (1840-1920) ஒரு பறவையியலாளராக இருந்தார்.

எபோனிமி

தொகு
  • காலண்ட்ரெல்லா எய்னி கோமியர், 1873.
  • கிளைத்தோரிங்சசு விட்டீன்சிசு எய்னி பின்ச் & ஹார்ட்லாப், 1870.
  • தங்கரா எய்னி (கருந்தலை தாங்கர்) கபானிசு, 1850.
  • சூதெரா எய்னி (வெண்சிவப்பு வால் பூங்குருவி) கபானிசு, 1850. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 The Eponym Dictionary of Birds by Bo Beolens, Michael Watkins, Michael Grayson

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்டினாண்ட்_எய்ன்&oldid=4063475" இலிருந்து மீள்விக்கப்பட்டது