பெர்ந்சென் அக்ரிடின் தொகுப்பு முறை

பெர்ந்சென் அக்ரிடின் தொகுப்பு முறை (Bernthsen acridine synthesis) என்பது ஈரரைலமீனுடன் கார்பாக்சிலிக் அமிலம் அல்லது அமிலநீரிலி மற்றும் துத்தநாகக் குளோரைடு சேர்த்து 9 ஆவது கார்பனில் பதிலீடு செய்யப்பட்ட அக்ரிடின் தயாரிக்கின்ற ஒரு வேதி வினையாகும்.[1][2]

பெர்ந்சென் அக்ரிடின் தொகுப்பு முறை
பெர்ந்சென் அக்ரிடின் தொகுப்பு முறை

துத்தநாகக் குளோரைடை உபயோகிக்கும் பொழுது வினையானது 200 முதல் 270° செ வெப்பநிலைக்கு 24 மணி நேரத்திற்கு சூடுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும்[3] . பாலிபாசுபாரிக் அமிலத்தைப் பயன்படுத்தினால் குறைவான வெப்பநிலையிலேயே அக்ரிடின் விளைபொருட்களைப் பெறமுடியும் ஆனால் குறைவான அளவில்தான் பொருட்கள் கிடைக்கும

மேற்கோள்கள் தொகு

  1. Bernthsen, A.; Ann. 1878, 192, 1.
  2. Bernthsen, A.; Ann. 1884, 224, 1.
  3. Popp, F. D. J. Org. Chem. 1962, 27, 2658. (எஆசு:10.1021/jo01054a518)