பெர்னார்டு ஆசுடன்
நியூசிலாந்து விவசாய வேதியியலாளர் மற்றும் தாவரவியலாளர்
பெர்னார்டு கிராக்ரோஃப்ட் ஆசுடன் (Bernard Cracroft Aston) நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு விவசாய வேதியியலாளர் மற்றும் தாவரவியலாளர் ஆவார். [1] 1871 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 9 ஆம் நாள் இங்கிலாந்தின் கெண்ட் நகரிலுள்ள பெக்கன்காமில் பிறந்தார். 1907 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் உருவாக்கப்பட்ட துணை அண்டார்டிக் தீவுகள் அறிவியல் பயணக்குழுவில் இவரும் ஓர் உறுப்பினராக இருந்தார்.[2] விவசாயம் மற்றும் தாவரவியல் துறைகளில் அசுடனின் சேவைகளைப் பாராட்டி 1949 ஆம் ஆண்டு புத்தாண்டு அறிவிப்பில் பிரித்தானியப் பேரரசின் ஆணைக்குழுவின் உயர் தளபதியாக நியமிக்கப்பட்டார் [3]. 1951 ஆம் ஆண்டு மே மாதம் ஆசுடன் மறைந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Grimmett, R. E. R. (1949). "Bernard Cracroft Ashton: First New Zealand Official Agricultural Chemist". New Zealand Journal of Animal Science and Production 1949: 10-23. http://www.nzsap.org/system/files/proceedings/1949/ab49002.pdf.
- ↑ Bailey, R. W. "Bernard Cracroft Aston". Dictionary of New Zealand Biography. Ministry for Culture and Heritage. பார்க்கப்பட்ட நாள் 23 April 2017.
- ↑ "No. 38494". இலண்டன் கசெட் (Supplement). 31 December 1948. p. 34.