பெர் அயோடினேன்கள்

வேதிச் சேர்மம்

பெர் அயோடினேன்கள் (Periodinanes) என்பவை அயோடின் ஆக்சிசனேற்ற நிலை +5 இல் காணப்படும் கரிம அயோடின் சேர்மங்களைக் குறிக்கின்றன. இவற்றை λ5- அயோடேன்கள் என்ற பெயராலும் அழைக்கின்றனர். அயோடின் அணுக்களின் இணைதிறன் கூட்டில் எட்டு எலக்ட்ரான்களுக்கு மேல் இருப்பதால் இத்தகைய சேர்மங்களை மீ இணைதிற சேர்மங்கள் என்கிறோம்.

தெசு-மார்டின் பெர் அயோடினேன்

பெர் அயோடினேன் சேர்மங்கள் தொகு

தெசு-மார்டின் பெர் அயோடினேன் போன்ற λ5- அயோடேன்கள் அடித்தளத்தில் 4 வேற்றின அணுக்களையும் உச்சியில் பீனைல் குழுவையும் கொண்டுள்ள சதுர பட்டைக்கூம்பு வடிவியலை ஏற்கின்றன.

அயோடாக்சிபென்சீன் அல்லது அயோடைல் பென்சீன் (C6H5IO2 ) என்பது அறியப்பட்ட ஆக்சிசனேற்றும் முகவராகும். முதன்முதலில் வில்கெரோட் என்பவர் அயோடோசில் பென்சீனை நீராவிக் காய்ச்சிவடித்தலுக்கு உட்படுத்தி விகிதச்சமமின்றி பிரியும் அயோடைல் பென்சீன் மற்றும் அயோடோபென்சீன் சேர்மங்களை தயாரித்தார்.

2 PhIO → PhIO2 + PhI

தெசு-மார்டின் பெர் அயோடினேன் என்பது மற்றொரு வலிமையான ஆக்சிகரணியாகும். ஏற்கனவே 1983 இல் அறியப்பட்ட ஐ.பி.எக்சு. அமிலம் என்றழைக்கப்படும் 2- அயோடாக்சி பென்சாயிக் அமிலத்தின் மேம்படுத்தப்பட்ட சேர்மமே தெசு-மார்டின் பெர் அயோடினேன் ஆகும். 2-அயோடோபென்சாயிக் அமிலம், பொட்டாசியம் புரோமேட்டு, கந்தக அமிலம் ஆகியவற்றைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் 2- அயோடாக்சி பென்சாயிக் அமிலத்தை தயாரிக்கலாம்[1]. பெரும்பாலான கரைப்பான்களில் இது கரையாது. ஆனால் அசிட்டிக் நீரிலியுடன் 2- அயோடாக்சி பென்சாயிக் அமிலத்தைச் சேர்த்து தயாரிக்கப்படும் தெசு-மார்ட்டின் வினையாக்கி நன்கு கரையும். ஈந்தணைவி பரிமாற்ற வினையை தொடர்ந்து நிகழும் ஒரு ஒடுக்க நீக்க வினை இந்த ஆக்சிசனேற்றத்தின் வினைவழிமுறையாகும்.

பயன்கள் தொகு

கன உலோகங்களை அடிப்படையாக்க் கொண்ட நச்சு வினையாக்கிகளுக்கு மாற்றாக பெர் அயோடினேன்களை பயன்படுத்த முடியும் என்பது முக்கியமானதொரு பயனாகும்[2].

மேற்கோள்கள் தொகு

  1. Robert K. Boeckman, Jr., Pengcheng Shao, and Joseph J. Mullins. "1,2-Benziodoxol-3(1H)-one, 1,1,1-tris(acetyloxy)-1,1-dihydro-". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=v77p0141. ; Collective Volume, vol. 10, p. 696
  2. Hypervalent iodine(V) reagents in organic synthesis Uladzimir Ladziata and Viktor V. Zhdankin Arkivoc 05-1784CR pp 26-58 2006 Article

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்_அயோடினேன்கள்&oldid=2796524" இலிருந்து மீள்விக்கப்பட்டது