பெற்றோர் என்பது தங்கள் வாரிசை (குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். மனித சிசுவிற்கு உயிரியல் அடிப்படையில் ஆண் - பெண் என இரண்டு பெற்றோர்கள் இருப்பார்கள். ஆண், தந்தை என்றும் பெண், தாய் என்றும் அழைக்கப்படுவர். இவர்களே மனித சமூகத்தில் அக்குழந்தையை வளர்க்கவேண்டியவர்கள். வாரிசுகளின் மூலம் உருவாகும் அடுத்த தலைமுறைக்கு இவர்கள் மூதாதையர்கள் ஆவார்கள்

உயிரியல்சார் பெற்றோர் சோதனை

தொகு

உயிரியல்சார் பெற்றோர் என்பது அந்தக் குழந்தையின் ரத்த பந்தமுடைய பெற்றோரைக் குறிக்கிறது. சில சமயங்களில் மறுமணம் போன்ற காரணங்களால் சில பெற்றோர்கள் குழந்தைக்கு உயிரியல் தொடர்பில்லாதவர்களாகவும் இருப்பார்கள். குழந்தையின் உண்மையான (உயிரியல்சார்) பெற்றோர் யாரென்று கண்டுபிடிக்க பெற்றோர் சோதனை நடக்கிறது. பெற்றோரின் டி.என்.ஏவையும் குழந்தையின் டி.என்.ஏவையும் கொண்டு ஆராய்ந்து சோதனை நடத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெற்றோர்&oldid=3407436" இலிருந்து மீள்விக்கப்பட்டது