பெலோவைட்டு-(Ce)
பாசுபேட்டுக் கனிமம்
பெலோவைட்டு-(Ce) (Belovite-(Ce)) என்பது (NaCeSr3(PO4)3F) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பன்னாட்டு கனிமவியல் சங்கம் பெலோவைட்டு-(Ce) கனிமத்தை Blv-Ce[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. பெலோவைட்டு-(La) கனிமத்தின் சீரியம் ஒப்புமையாக இது கருதப்படுகிறது. பெலோவைட்டு குழுவின் துணைக்குழுவான அபடைட்டு குழுவில் இது இடம்பெறுகிறது.
பெலோவைட்டு-(Ce) முதன்முதலில் 1954 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. நிகோலாய் பெலோவ் நினைவாக கனிமத்திற்கு இப்பெயரிடப்பட்டது. உருசியாவின் லோவோசெருசுக்கி மாவட்டத்தில் உள்ள மாலி புங்கருவைவ் மலையில் பெலோவைட்டு-(Ce) காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Mindat
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை