பெலோவைட்டு-(La)

பெலோவைட்டு-(La) (Belovite-(La)) என்பது (NaLaSr3(PO4)3F) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பன்னாட்டு கனிமவியல் சங்கம் பெலோவைட்டு-(Ce) கனிமத்தை Blv-La[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. பெலோவைட்டு-(Ce) கனிமத்தின் இலந்தனைடு ஒப்புமையாக இது கருதப்படுகிறது. பெலோவைட்டு குழுவின் துணைக்குழுவான அபடைட்டு குழுவில் இது இடம்பெறுகிறது.

பெலோவைட்டு-(La)
Belovite-(La)
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடு(NaLaSr3(PO4)3F)
இனங்காணல்
நிறம்தேன் மஞ்சள், பசு மஞ்சள்
படிக அமைப்புமுக்கோணவமைப்பு
முறிவுசீரற்றது
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை5
மிளிர்வுசிறு பளபளப்பு, பிசின் மற்றும் மெழுகுத் தன்மை
கீற்றுவண்ணம்வெண்மை
ஒப்படர்த்தி4.19
மேற்கோள்கள்[1]

பெலோவைட்டு-(La) முதன்முதலில் 1996 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. நிக்கோளாய் பெலோவ் கண்டறிந்த காரணத்தால் பெலோவைட்டு என்ற பெயரைப் பெற்றது. உருசியாவின் மர்மன்சுக்கு பிராந்தியத்தில் உள்ள கிபினி மலைகளில் இரண்டு வகையான இடங்களில் பெலோவைட்டு கிடைக்கிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Belovite-(La) at Mindat.org
  2. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலோவைட்டு-(La)&oldid=4104162" இலிருந்து மீள்விக்கப்பட்டது