பெள்ளந்தூர் ஏரி
பெள்ளந்தூர் ஏரி (கன்னடம்: ಬೆಳ್ಳಂದೂರು ಕೆರೆ/ಕೊಳ/ಹಳ್ಳ), தென்கிழக்கு பெங்களூரில் உள்ள ஏரியாகும். இது பெள்ளந்தூர் சாக்கடைத் திட்டத்தின் தெற்குப் பகுதிகளையும் தென்கிழக்குப் பகுதிகளையும் சார்ந்த பகுதியாகும். பெள்ளந்தூர் ஏரி சுமார் 148 சதுர கிமீ (37,000 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ளது.
பெள்ளந்தூர் ஏரி | |
---|---|
அமைவிடம் | பெங்களூருவின் தென்கிழக்குப்பகுதி |
ஆள்கூறுகள் | 12°56′3″N 77°39′46″E / 12.93417°N 77.66278°E |
முதன்மை வெளியேற்றம் | வரத்தூர் ஏரி |
வடிநிலப் பரப்பு | 148 சதுர கிமீ |
அதிகபட்ச நீளம் | 3.6 கிமீ |
அதிகபட்ச அகலம் | 1.4 கிமீ |
மேற்பரப்பளவு | 3.61 சதுர கிமீ |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 921 மீ |
உறைவு | இல்லை |
குடியேற்றங்கள் | பெங்களூரு |
இந்த ஏரி நீரானது கிழக்கே வரத்தூர் ஏரிக்கும், அங்கிருந்து பிங்கானி ஆற்று பாசனத்திற்கும் செல்கிறது[1]. தற்போது இந்த ஏரியானது கழிவுநீரால் மாசடைந்துள்ளது. 2015-ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்த ஏரியின் நுரையினால் தீப்பிடித்து பல மணிநேரம் எரிந்தது குறிப்பிடத்தக்கது.
புவியியல்
தொகுபெள்ளந்தூர் ஏரி, பெங்களூரில் அமைந்துள்ள நீர்நிலைகளில் முக்கியமான ஒன்றாகும். தென்பெண்ணை ஆற்றின் பகுதியையும், வரத்தூர் ஏரியையும் சார்ந்துள்ளது இந்த ஏரி. இப்பகுதியில் உள்ள வணிக வளாகங்களாலும், குடியிருப்புப் பகுதிகளாலும், இப்பகுதி மாசடைந்து நிலத்தடி நீர் குறைந்து காணப்படுகிறது[2]
படக்காட்சியகம்
தொகு-
ஆகாயத்தாமரை படர்ந்து நீர்வாழ் உயிரனங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது
-
மாலை வேளையில் பெள்ளந்தூர்