பெ. பி. விக்கிரமசூரிய
பெருமபது பியசேன விக்கிரமசூரிய (Perumabadu Piyasena Wickramasuriya) என்பவர் ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். 1921 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இலங்கை சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தெவிநுவரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2]
விக்கிரமசூரிய முதலில் 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற மார்ச்சு பொதுத் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியிலிருந்து தெவிநுவரை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் சி.ஏ. தர்மபாலவிடம் தோல்வியடைந்தார். ஆனால் 1960 ஆம் ஆண்டு சூலையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தர்மபாலவை தோற்கடித்து தெவிநுவரையிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964 டிசம்பரில் சி.பி. டி சில்வாவுடன் இணைந்து எதிர்க்கட்சிக்குச் சென்றார். 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் வில்லியம் டி சில்வாவிடம் இலங்கை சுதந்திர சோசலிசக் கட்சியில் போட்டியிட்டு ரொனி டி மெல் அவர்களால் தோற்கடிக்கப்பட்டார். 1970 பொதுத் தேர்தலில் இவர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து போட்டியிட்டார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hon. Wickramasuriya, Perumabadu Piyasena, M.P." Directory of Past Members. Parliament of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 24 August 2021.
- ↑ Parliament of Sri Lanka (1972). Members of the Legislatures of Ceylon, 1931-1972. Parliament of Sri Lanka.
- ↑ "RESULTS OF THE PARLIAMENTARY GENERAL ELECTION - 20/07/1960" (PDF). elections.gov.lk. Department of Elections, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 1 February 2022.