பேங்கிரியாட்டின்

பன்றி, எருது போன்ற சில விலங்குகளின் உலர்த்தப்பட்ட சாராயப் பிழி சாரையே பேங்கிரியாட்டின் என்கின்றனர். டிரிப்சின் மற்றும் அமிலேசு , லைப்பேஸ் போன்ற நொதிகள், பேங்கிரியாட்டினில் காணப்படுகின்றன. இதை உட்கொண்டால் செரிமானம் நன்கு நடைபெறுவதுடன், உடலில் வலிமையும் உண்டாகிறது. இதைப் பால், ஓட்,கஞ்சி, கூழ்க்கஞ்சி, மாட்டு இறைச்சி, தேயிலை ஆகியவற்றுடன் கலந்து கொடுத்தால் கொழுப்பு, புரதம், கார்போவைதரேட்டு ஆகியவை எளிதில் செரிமானம் அடைகின்றன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. அ. கதிரேசன் (2007). அறிவியல் களஞ்சியம். Vol. பதினேழு. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். p. 177.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேங்கிரியாட்டின்&oldid=3526004" இலிருந்து மீள்விக்கப்பட்டது