பேச்சு:அக்கினேனி நாகேஸ்வர ராவ்

நாகேசுவர ராவ் பிறந்தது 1924 செப்டம்பர் 20 இல் என என்னிடம் உள்ள 1951 ஆம் ஆண்டு மே மாத பேசும் படம் கூறுகிறது.--Kanags \உரையாடுக 08:17, 23 சனவரி 2014 (UTC)Reply

The Hindu மேற்கோளுடன் 1924 செப்டம்பர் 20 என்று தான் எழுதியிருந்தேன். நான் பார்த்த வேறொரு ஆவணத்திலும் 1924 என்று தான் இருந்தது. ஆங்கில விக்கி கட்டுரையில் 1923 என உள்ளது. அதிலிருந்து தகவல் எடுத்து எழுதப் பட்ட கட்டுரையில் 1923 என எழுதப் பட்டிருக்கலாம். நான் எப்பவுமே 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆவணங்களை check பண்ணுவது வழக்கம். மீளமைத்துள்ள கட்டுரையில் ஐந்தாவது மேற்கோள் இணைப்பு உடைந்துள்ளது.
தமிழ் படங்களில் அவர் பெயர் ஏ. நாகேஸ்வர ராவ் என்றே அறியப்பட்டார். ஆங்கில விக்கி கட்டுரை தெலுங்கு திரைப்பட வரலாற்றை முன்நிலைப் படுத்தி எழுதப் பட்டுள்ளது. நான் தமிழ் திரைப்பட வரலாற்றை முன்நிலைப் படுத்தி எழுதினேன். வேளாண் துறையிலிருந்து நாடகத் துறை மூலமாக திரைப்படத் துறைக்கு வந்ததாக எழுதப்பட்டுள்ளது. அவர் வேளாண் துறையில் பணியாற்றியதாக எவ்வித தகவலும் இல்லை. - Uksharma3 (பேச்சு) 09:11, 23 சனவரி 2014 (UTC)Reply
நன்றி ஐயா, ஆங்கில விக்கியில் கட்டுரையை ஆரம்பித்த காலத்தில் ஓர் அனுமானமாய் 1923 எனக் குறித்துள்ளார்கள் போல் தெரிகிறது. என்னிடம் உள்ள 1951 ஆம் ஆண்டைய 15 பக்கக் கட்டுரையைப் படித்து விட்டு மேலதிக தகவல்களை இடுகிறேன்.--Kanags \உரையாடுக 09:17, 23 சனவரி 2014 (UTC)Reply
மேலும், தமிழ் விக்கி பெயரிடல் முறைப்படி, தலைப்பு அ. நாகேஸ்வர ராவ், அல்லது முழுப்பெயரில் இருக்க வேண்டும். ஏனையவற்றிற்கு வழிமாற்று ஏற்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 09:19, 23 சனவரி 2014 (UTC)Reply

கட்டுரையை மேலும் விரிவு படுத்த எண்ணியிருந்தேன். கடைசியாக அவர் மனம் என்ற படத்தில் தனது மகன், பேரன் ஆகியோருடன் சேர்ந்து (3 தலைமுறை ஒரே படத்தில்) நடித்ததாக ஒரு தகவல் இருந்தது. அது பற்றி மேலும் அறிந்து சேர்க்கலாம்.
http://www.telugufilmfun.com/celebrity_interviews/Akkineni_Nageswara_Rao_Birthday.php என்ற இணைப்பு உடைந்துள்ளது. அத்துடன் Raja-Harishchandra - Trailer - Cast - Showtimes - NYTimes.com என்ற மேற்கோளில் குறிப்பிட்ட நாடகங்களில் அவர் நடித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பேசும் படம் அக்காலத்தில் (ஆசிரியர் ராம்நாத்?) தமிழ் திரைப்படங்கள் பற்றிய பல செய்திகளைத் தாங்கி வெளிவந்தது. அதன் ஆங்கிலப் பதிப்பில் இந்தி திரைப்பட செய்திகள் வந்தன. நல்ல சேகரிப்பு. பாராட்டுக்கள். - Uksharma3 (பேச்சு) 13:24, 23 சனவரி 2014 (UTC)Reply

Return to "அக்கினேனி நாகேஸ்வர ராவ்" page.