பேச்சு:அசுபாசியா
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Anbumunusamy
@Anbumunusamy: கட்டுரையைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு, //தனது குடும்பத்தை பற்றி சிறிது தெரிந்திருந்தாலும், அவர் ஒரு பணக்கார குடும்பத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது, ஏனென்றால், சிறந்த கல்வியை பெற்றிருந்தால் அவ்வாறாக இருந்தால் மட்டுமே அவள் பெற்றிருக்க முடியும்.// போன்ற வரிகளைக் கவனியுங்கள். கூகுள் மொழிபெயர்ப்பு மூலம் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையின் பொருளைப் புரிந்து கொண்டு, தமிழ் நடைக்கு ஏற்ப இயல்பாக எழுத வேண்டுகிறேன். தேவைப்படும் மேம்பாடுகளைச் செய்த பிறகு தெரிவியுங்கள். இதனைப் போட்டிக் கணக்கில் சேர்க்கலாம். --இரவி (பேச்சு) 11:13, 27 மார்ச் 2018 (UTC)
- @Ravidreams: கவனித்து சரி செய்கிறேன், மேலும் கடினமான தலைப்புகளை தேர்வுசெய்துவிட்டேன் என்று நினைக்கிறேன், மற்றும் பெருபாலான தலைப்புகள் மிகவும் கடினமாகவே உள்ளது ஆகையால் இந்த போட்டியிலிருந்து விலகி, நான் எழுதியுள்ள அனைத்து கட்டுரைகளையும் திருத்தம் செய்யப்போகிறேன், மன்னிக்கவும் போட்டிகள் எனக்கு முக்கியமல்ல தமிழுக்கு சேவைசெய்யவே இப்பணியை செய்கிறேன் அப்பணியை இயன்றவரை சரியாக செய்யப்போகிறேன். நன்றிகள்... அன்பு♥முனுசாமிᗔ
உறவாடுகᗖᗗஉரையாடுக! : 15:55, 27 மார்ச்சு 2018 (UTC)
- @Anbumunusamy: அருள்கூர்ந்து போட்டியில் இருந்து விலக வேண்டாம். பல தலைப்புகள் துறை சார் புரிதலைக் கோரும் வண்ணம் கடினமாக உள்ளது உண்மை தாம். அதனால் தான் நானும் இன்னும் போட்டியில் குதிக்காமல் இருக்கிறேன் :) அனைத்து இந்திய விக்கிப்பீடியாக்களிலும் இருக்க வேண்டிய தலைப்புகள் குறித்து உங்கள் விருப்பங்களைச் சேர்த்தமைக்கு நன்றி. அந்தப் பட்டியல் அணியமாகும் போது அதில் ஒவ்வொருவரின் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு எளிமையான தலைப்புகள் அமையும் என்று எதிர்பார்க்கலாம். அப்போது தொடர்ந்து போட்டியில் பங்கேற்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இது போல் தமிழக குடிசை மாற்று வாரியம், SSLC குறித்து தாங்கள் எழுதிய கட்டுரைகள் மிகவும் பயனுள்ளவை. --இரவி (பேச்சு) 14:24, 28 மார்ச் 2018 (UTC)
- @Ravidreams: வணக்கம், தங்களுக்காகவும், தமிழுக்காகவும், தலைவணங்கி ஏற்கிறேன் போட்டியை.நன்றிகள்... அன்பு♥முனுசாமிᗔ