பேச்சு:அசையாக்கரடி

Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams in topic க்

சிவகுமார், நான் செய்துள்ளது தவறாக இருக்கலாம். நீங்கள் செய்திருந்த பகுப்பு மாற்றத்தைப் பார்க்காமல், நான் பாலூடிகள் பகுப்பை ஏற்படுத்தினேன். எப்படிச் செய்தால் சரியோ, அப்படியே செய்துவிடுங்கள். --C.R.Selvakumar 14:04, 30 அக்டோபர் 2006 (UTC)Reply

செல்வா, சேய்ப் பகுப்பு இருப்பதால் தாய்ப்பகுப்பைத் தரவேண்டியதில்லை. நெருக்கமான பகுப்பைத் தந்தால் போதுமானது. தேவையான மாற்றங்களை சுந்தர் செய்துள்ளார். --Sivakumar \பேச்சு 15:04, 30 அக்டோபர் 2006 (UTC)Reply

சிறு கேள்விகள் - செல்வா கவனிக்க

தொகு

மெல்ல, மெள்ள - வேறுபாடு என்ன? எல்லாமுண்ணி என்று சொல்வதை விட அனைத்துண்ணி என்று சொல்வது நன்றாக இருப்பது போல் தோன்றுகிறது??--Ravidreams 18:09, 3 மார்ச் 2007 (UTC)

மெல்ல என்பதும் மெள்ள என்பது ஏறத்தாழ ஒரே பொருள் க்றிப்பதுதான் எனினும் சிறு வேறுபாடுகள் உண்டு. மெல்ல என்பது மெலிவு குறிப்பது, மெள்ள என்பது காலத் தாழ்ச்சியைக் குறிப்பது (மெதுவாகச் செய்வதைக் குறிக்கும்). இங்கே இரண்டு சொற்களும் பொருந்தும். அனைத்துண்ணி என்பதனையே ஆளலாம். --செல்வா 18:25, 3 மார்ச் 2007 (UTC)

க்

தொகு

அலைகடல் = அலைகின்ற கடல்; அலைக்கடல் = அலையைக் கொண்டுள்ள கடல் என்று ஓரிடத்தில் படித்தேன். இதே போல் அசையா கரடி என்று எழுதினால் சரியாக இருக்குமோ? இடையில் க் வருமா? இதற்கான விதிகள் என்ன?--ரவி 20:29, 18 மே 2008 (UTC)Reply

அலைகடல் என்பது அலைகின்ற, அலைந்த, அலையும் கடல் என்று முக்காலத்திற்கும் ஏற்கும் ஆகையால் வினைத்தொகை என்பார்கள் (பரவலாக எடுத்துக்கூறும் எடுத்துக்காட்டு: ஊறுகாய் = ஊறுகின்ற, ஊறின, ஊறும் காய்). வினைத்தொகையில் ஒற்று மிகாது (புள்ளி வைத்த எழுத்து மிகுந்து வராது). ஆனால் அசையாக்கரடி என்னும் ஆட்சியில், அசையாத கரடி என்பதின் சுருக்கமாக, ஒரு பெயராக வந்துள்ளது. இந்த அசையாத என்னும் சொல் கரடி என்னும் பெயர்ச்சொல்லை விளக்க வந்தது, எனவே அது பெயரெச்சம். "அசையாத" என்று எதிர்மறையான பொருள் கொண்டுள்ளதால் எதிர்மறை பெயரெச்சம். அசையாத என்னும்சொல்லில் உள்ள கடைசி எழுத்தாகிய இல்லாமல் (கடைசி = ஈறு; ஈறுகெட்டது) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாக வந்துள்ளதால் வல்லெழுத்து மிகும். எனவே ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும். பரவலாக கூறப்படும் எடுத்துக்காட்டுகள் செல்லாக் காசு, வணங்காத் தலை, அழியாப் புகழ், கேளாச் செவி, ஓயாத் தொல்லை என்பன. --செல்வா 15:47, 19 மே 2008 (UTC)Reply

நன்றி செல்வா. பள்ளிக்கூடத்தில் படித்தது எல்லாம் நினைவுக்கு வருது :)--ரவி 15:53, 19 மே 2008 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அசையாக்கரடி&oldid=242588" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அசையாக்கரடி" page.