பேச்சு:அனோ டொமினி
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Kanags
கி.பி., கி.மு. கட்டுரைகளை இப்பக்கத்திற்கு வழிமாற்றூவது சரிதானா? அனைவருக்கும் இதில் உடன்பாடுண்டா? பக்கத் தலைப்புகளை தமிழிலேயே கொண்டு, கட்டுரைக்குள் அனோ டொமினி என்ற பெயர் குறித்து விளக்குவதே சரி என்று எனக்குப் படுகிறது--ரவி 08:43, 16 ஜூன் 2006 (UTC)
- கி.பி., கி.மு. என்பவ்ற்றை ஆங்கில விக்கியிலும் அனோ டொமினி பக்கத்துக்கே வழிமாற்றியுள்ளார்கள்.கி.பி., கி.மு. என்பவற்றை இந்த கட்டுரையில் விளக்குவாதே சிறந்தது.இவற்றுக்கு தனி கட்டுரை அமைத்தாலும் இக்கடுரயின்றி விளங்காது மேலும் இது ஒரே விடயத்தை இரண்டு(அல்லது 3) கட்டுரைகளில் கூறியாதாக முடியாதா?
- கட்டுரை தலைப்பை தமிழுக்கு மாற்றலாம். ஏதேனும் மொழிப்பெயர்பு உண்டா?
--டெரன்ஸ் 02:39, 30 ஜூன் 2006 (UTC)
கி.பி, கி.மு கட்டுரைகள் இப்பக்கத்துக்கு வழிமாற்றப்பட்டுள்ளன. இப்பக்கம் கி.பி கட்டுரைக்கு வழிமாற்றப்படுவதே தமிழில் பொருத்தமானது. கி.மு தனிக் கட்டுரையாக இருக்க வேண்டும். --கோபி 16:34, 20 பெப்ரவரி 2007 (UTC)
- ஒருசில ஆண்டுகளுக்கு முன்னரே இந்த உரையாடல் நடந்துள்ளதை இப்போதுதான் கவனித்தேன். ஒரு சில பரிந்துரைகள்:
- Anno Domini (= In the Year of the Lord) என்பதில் வருகின்ற Anno என்னும் சொல்லில் "ஆன்" என்பது அழுத்தம் பெறும். Domini என்பதில் "டோ" என்பது அழுத்தம் பெறும். எனவே சரியான ஒலிப்பு "ஆன்னொ டோமினி" என வரும். இத்திருத்தம் செய்வது நல்லது.
- "கிமு", "கிபி" என்று புள்ளியிடாமல் எழுதும்போது குழப்பம் எழக்கூடும். எனவே, "கி.மு.", "கி.பி." என்று புள்ளியிடுவதே நலம் என்பது என் கருத்து. வேண்டுமானால் "கிமு", "கிபி" ஆகியவற்றைத் திருப்பி விடலாம். இச்சொற்களுக்கான விளக்கத்திற்குத் தமிழ் விக்கியில் மெருகூட்ட எண்ணியிருக்கிறேன். தற்போது "இயேசு கிறித்து" என்னும் முகப்புக் கட்டுரையைத் தொகுப்பதில் ஈடுபட்டிருக்கிறேன். அதிலும், "இயேசு கிறிஸ்து" என்றும், "ஏசு கிறிஸ்து" என்றும் தலைப்புகள் கொடுத்து, திருப்பி விட்டால் நல்லது. பல பயனர்கள் "கிறிஸ்து" என்னும் சொல்/ஒலி வடிவத்தைக் கையாளுவதால் இம்மாற்றம் பயனுள்ளதாக அமையலாம்.
- மேலை நாடுகளில் "கி.மு.", "கி.பி." என்பதற்குப் பதிலாக "CE", "BCE" என்னும் சொல்வழக்கு பயின்றுவருகிறது. அதற்கு "Common Era", "Before the Common Era" என்பது ஒரு விளக்கம். "Christian Era", "Before the Christian Era", என்றும், "Current Era", "Before the Current Era" என்னும் விளக்கங்களும் உண்டு. இந்த விளக்கங்களை அடியொற்றி, தமிழ் விக்கியில் "கிறித்தவ ஆண்டு", "கிறித்தவ ஆண்டுக்கு முன்" என்று இரு தலைப்புகள் கொடுத்து, அவற்றின் சுருக்கமாக "கிஆ", "கிஆமு" என்று வடிவமைத்து, ஆங்கில விக்கியின் "Common Era" Common Era, "BCE" BCE ஆகியவற்றிற்கு இணைப்பு கொடுக்கலாமா? வணக்கம்!--பவுல்-Paul 15:14, 12 நவம்பர் 2010 (UTC)
- பவுல், கட்டுரையில் வேண்டிய மாற்றங்களைச் செய்யுங்கள். தலைப்பை ஆன்னொ டோமினி என மாற்றலாம்.--Kanags \உரையாடுக 01:13, 25 நவம்பர் 2010 (UTC)