பேச்சு:அமிழ் தண்டூர்தி

Add topic
There are no discussions on this page.

இந்த டிராமைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம் எனத் தேடிக்கொண்டிருந்தேன். நல்ல சொல் ஒன்றைத் தந்திருக்கிறீர்கள் கலை. நன்றி. கொழும்பில் முன்னர் இந்த டிராம் வண்டிகள் ஓடின. இதன் பாதைகள் கொழும்பில் அண்மைக்காலம் வரை இருந்தன. இப்போதும் உள்ளதோ தெரியாது.--Kanags \உரையாடுக 11:54, 12 ஏப்ரல் 2011 (UTC)

கொழும்பில் இவ்வகையான வண்டிகள் இருந்தது எனக்குத் தெரியாது. தற்போது எங்கேயும் இவ்வகை பாதைகளைக் காணவில்லை. அல்லது இருந்தும் நான் அவதானிக்கவில்லையா தெரியவில்லை.--கலை (பேச்சு) 15:08, 18 மே 2012 (UTC)

எதற்காக அமிழ் என்ற சொல் இவ்வகை ஊர்திகளுடன் இணைக்கப்பட்டது? அமிழ் என்பதன் உண்மையான அர்த்தம் அமிழ்தல் தானே? இந்த ஊர்திகளுக்கும் அதற்கும் என்ன தொடர்பு? தயவு செய்து எவராவது விளக்கவும். நன்றி.

//இவை வீதியில் அமிழ்ந்துள்ள தண்டவாளங்களில் இயக்குவிக்கப்படும்.// அதாவது இதன் தண்டவாளங்கள் வீதிக்கு மேலாகச் செல்லாமல், வீதிக்குள் (அதாவது நிலத்தினுள்) அமிழ்ந்திருக்கின்றது. எனவே வேறு வாகனங்களும் அந்தப் பாதையில் செல்லக் கூடியதாக இருக்கும்.--கலை (பேச்சு) 11:26, 19 பெப்ரவரி 2015 (UTC)
Return to "அமிழ் தண்டூர்தி" page.