பேச்சு:அமைதிப் பெருங்கடல்

இக்கட்டுரை இதன் ஆங்கில விக்கிப்பீடியா பக்கத்திலிருந்து மொழிபெயர்கப்பட்டுள்ளது. தவறுகள் இருந்தால் திருத்தவும். - வைகுண்ட ராஜா 20:55, 18 ஜூன் 2006 (UTC)

வைகுண்ட ராஜா, உங்கள் பசிபிக் பெருங்கடல் கட்டுரை மிக நல்ல ஆக்கம். சில மாற்றங்கள் தேவைப்பட்டாலும் அவைகளை எளிதாகச் செய்யலாம். உங்கள் நன்முயற்சியை பாராட்டுகிறேன். பசிபிக் பெருங்கடலைச் சுற்றி இருப்பது எரிமலை வளையம், பசிபிக் பெருங்கடலுள் இருப்பது ஆழ் அகழிகள். --C.R.Selvakumar 14:20, 19 ஜூன் 2006 (UTC)செல்வா

தலைப்பு மாற்றம்

தொகு

பசிபிக் = pacibig. பசிப்பிக் = pacipic என்பது pacific என்பதற்கு நெருக்கமான ஒலிப்பாக இருக்கும். --இரவி 23:58, 10 பெப்ரவரி 2012 (UTC)

ஆனாலும் பசிபிக் என்பதே பொது வழக்கில் உள்ளது. --மதனாஹரன் (பேச்சு) 04:55, 10 மார்ச் 2012 (UTC)
பசிபிக், பசிப்பிக் இரண்டுமே தவறான ஒலிப்புகளாக இருக்கும் போது பசிபிக் என்ற பொது வழக்கைப் பின்பற்றுவதில் தவறில்லை. கூடிய ஒலிப்புத் தேவைப்படுவோர் மட்டும் பசிஃபிக் என எழுதலாம்.--Kanags \உரையாடுக 05:21, 10 மார்ச் 2012 (UTC)

கூடிய ஒலிப்புத் துல்லியத்துக்காக கோரவில்லை. பசிப்பிக் என்பது தவறான ஒலிப்பு கிடையாது. தமிழ்ப்படுத்திய ஒலிப்பு. ஆப்பிரிக்கா என்பது போல. ஆனால், பசிபிக் (pacibig) என்று எழுதிவிட்டு pacipic என்று ஒலிப்பதால் தமிழின் ஒலிப்பு ஒழுங்கு கெடுகிறது. பிற மொழியில் இருந்து ஒலிபெயர்க்கப்படும் பல சொற்களில் இந்தப் பிரச்சினை உள்ளது. திரும்ப திரும்ப பல பக்கங்களில் இதனைக் குறிப்பிடுவது அயரச் செய்யக்கூடும் என்பதால், இது குறித்து முறையாக உரையாடி ஒரு கொள்கை வழிகாட்டைத் தர வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 06:59, 10 மார்ச் 2012 (UTC)

இதனை அமைதிப் பெருங்கடல் என அழைக்கலாம். பசிபிக்குக் கடல் என்றும் அழைக்கலாம். அல்லது பசிபிக்கடல் என்று பிரிக்காமலே எல்லா இடங்களிலும் எழுதலாம் (பசிபி என்பது கடலில் பெயர், சேர்த்து எழுதும் பொழுது பசிபிக்கடல் :) ). ஆங்கிலத்தில் Atlantic, Antartic என்பதில் வரும் கடைசி -ic அவர்கள் மொழிக்கான பின்னொட்டு. இதைக்கூட உணராமல் நாம் தமிழில் எழுத்துப்பெயர்த்து வருவது வருந்தத்தக்க சூழல். ஆங்கிலேயன் French என்றால் நாம் பிரெஞ்(ச்)சு என்பது, ஆங்கிலேயன் Polish, Spanish என்றால் நாம் போலிஷ், ஸ்பானிஷ் என்பது - இப்படிப் அடிப்படையான பின்னொட்டுகள் கூட அறிந்து அவற்றை விலக்கி எழுதத்தெரியாதவர்களாக இருப்பது வருத்தம் தருவது! Pacific Ocean என்பதை இடாய்ச்சு மொழியர் Pazifischer Ozean என்றும் எசுப்பானியர் Océano Pacífico என்றும் பலரும் அவர்கள் மொழிக்கான பின்னொட்டுகளுடன் எழுதுகின்றனர். இந்தியில் கூட प्रशान्त महासागर (பிரசா^ந்த் மஃகாசாகர்), இடேனிய மொழியில் Stillehavet (அமைதிப் பெருங்கடல்). இதே போல Atlantic Ocean, Antartic Ocean என்பனவற்றை இடாய்ச்சு மொழி Atlantischer Ozean, Südlicher Ozean என்கிறது. ஆங்கிலத்தில் கூட Antartic Ocean என்பதை Southern Ocean என்றே இப்பொழுது குறிக்கிறார்கள். எனவே அமைதிப் பெருங்கடல் என்று எழுதுவதால் தவறில்லை. --செல்வா (பேச்சு) 14:07, 10 மார்ச் 2012 (UTC)
ஆதரவு! --மதனாஹரன் (பேச்சு) 02:34, 11 மார்ச் 2012 (UTC)
செல்வா, எது ஆங்கிலப் பின்னொட்டு, எது காரணப் பெயர் என்று கூட மனதில் இருத்தாத அளவுகுக்குத் தான் நமது கல்விமுறை உள்ளது :( அமைதிப் பெருங்கடல் என்று மாற்றலாம். இதைப் போன்ற பரவலான காரணப் பெயர்களுக்குத் தமிழ் பெயருக்கு முன்னுரிமை தருவது குறித்த கொள்கை முன்மொழிவையும் தரலாம். நன்றி--இரவி (பேச்சு) 10:39, 15 மார்ச் 2012 (UTC)
Return to "அமைதிப் பெருங்கடல்" page.