பேச்சு:அரியாண்டிபுரம் ஊராட்சி
Latest comment: 7 மாதங்களுக்கு முன் by 202.53.6.73 in topic கோயில்கள்
கோயில்கள்
தொகுஅரியாண்டிபுரத்தில் விநாயர் கோயில் அய்யனார் கோயில், மாதேஸ்வரன் என்ற சிவன் ஆலயம் (அம்மன்:கூம்பாச்சியம்மன்), வடக்கே பிடாரியம்மன், முனிஈஸ்வரன் கோயில்கள் உள்ளன. இதில் முனிஈஸ்வரன் கோயில் ஒரு தரப்பு மக்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர். மேலும் மேலக்குடியிருப்பில் (தற்போது அது வடக்கு குடியிருப்பு என்று அழைக்கப்படுகிறது) முளைகொட்டுத் தின்னையில் உள்ள மாரியம்மனுக்கு ஆடி மாதம் முளைகொட்டு திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். அதே குடியிருப்பில் வெள்ளாளர்களுக்கு பாத்தியப்பட்ட பெரியகருப்பணசுவாமி மற்றும் மீனாள் கோயில் உள்ளது. இது அந்த சமுதாய மக்களின் குலதெய்வமாக உள்ளது. வருடந்தோறும் மாசி சிவராத்திரியன்று அந்த கோயிலின் திருவிழா வெகு விமரிசையாக நடக்கிறது. மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் உடையார் குடியிருப்பில் அமைந்துள்ளது. 202.53.6.73 16:04, 29 மார்ச்சு 2024 (UTC)