பேச்சு:அலேட்ச் பனியாறு

Glacier என்பது பனிப்பாறை அல்ல. மிக மிக மெதுவாக நகரும் பனியாறு. இதனைப் பனிப் பையாறு என்பது சரியாக இருக்கும். பைய என்றால் மெள்ள, மெதுவாக என்று பொருள். பனியாறு என்றே பலரும் இதனை வழங்கியும் வந்துள்ளனர். பனிப் பாறை என்பது iceberg என்பதற்குப் பொருந்தலாம். iceberg என்பதைப் பெரும் பனிப்பாளம் என்றும் கூறலாம்.தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கிறேன்--செல்வா 14:49, 13 நவம்பர் 2008 (UTC) தமிழ் விக்கியில் பனியாறு என்று ஒரு கட்டுரை இருப்பதையும் பார்க்க வேண்டுகிறேன்.--செல்வா 14:51, 13 நவம்பர் 2008 (UTC)Reply

அலேட்ச் பனியாறு என மாற்றிவிடலாம். ஆங்கில விக்கியில் Glacier என்ற கட்டுரையில் தமிழ்க்கட்டுரைக்கு இணைப்புத் தரப்படவில்லை. இப்போது தந்துள்ளேன்.--Kanags \பேச்சு 20:09, 13 நவம்பர் 2008 (UTC)Reply

"Catchment Area,Glacier lake, Glacier cave, Firn" என்பதன் தமிழ் வார்த்தை என்ன.--Rnarendr 14:53, 17 நவம்பர் 2008 (UTC)Reply

catchment area - நீர்ப்பிடிப்புப் பகுதி--சிவக்குமார் \பேச்சு 15:51, 17 நவம்பர் 2008 (UTC)Reply
Firn என்பதற்கு சற்றே வெவ்வேறு பொருள்கள் காட்டுகிறார்கள். இங்கே பார்க்கவும். குறுணை குறுணையாக (குறுநொய், குறுநொய்யாக) இருக்கும் தூவிப்பனி காலப்போக்கில் மண்டி இணைந்து இருப்பதை firn என்கிறார்கள். இதனை அடைபனி எனலாம். தூவிப்பனி (snow) பற்பல வடிவங்களில் இருப்பதை நேரில் கண்டு வியப்பவன் என்னும் முறையில், snow என்னும் ஒற்றைப் பெயர் நிறைவு தருவதில்லை. சில நேரங்களில் தூவிப் பனி இறுகுபனி (packing snow) ஆக இருக்கும். சில நேரங்களில் சாய் தளத்தில் அள்ளி இட்டால் உருண்டோடும் மணற்பனியாக இருக்கும், இன்னும் சில நேரங்களில் தூவி போல் மென்மையாக இலவம் பஞ்சினும் இலேசாக நுரைபோல் இருப்பதால் நுரைபனியாக இருக்கும். சில நேரங்களில் ஈரப்பனியாக இருக்கும். ஆகவே தூவிப்பனி பல வடிவங்கள் கொள்ளும். மேலும் மேலும் விழுந்து முற்றிலும் உருகிவிடாமல் சற்று உருகியும் மீண்டும் உறைந்தும் அடைந்து கிடக்கும் தூவிப்பனியாகிய firn என்னும் பனியை அடைபனி எனலாம் என்று நினைக்கிறேன். --செல்வா 03:46, 18 நவம்பர் 2008 (UTC) Glacier lake என்பதை பனியாற்று ஏரி எனலாம். Glacier cave என்பதை பனிக்குகை அல்லது பனியாற்றுக் குகை எனலாம்.--செல்வா 03:54, 18 நவம்பர் 2008 (UTC)Reply

Firn Snow, Firn Ice, Glacier Ice என்பதன் இணையான தமிழ் வார்த்தை என்ன?--Rnarendr 14:33, 19 நவம்பர் 2008 (UTC)Reply

Firn snow அடை தூவிப்பனி அல்லது அடைபனி அல்லது அடைபனித்தூவி எனலாம். Firn Ice என்பதற்கு அடை உறைபனி அல்லது உறை அடைபனி எனலாம். Glacier Ice என்பதற்கு பனியாற்றுப் பனிக்கட்டி அல்லது பையாற்றுப் பனிக்கட்டி அல்லது பனியாற்று உறைபனி அல்லது பனியாற்றுக் கட்டி எனலாம்.--செல்வா 15:07, 19 நவம்பர் 2008 (UTC)Reply

Flow, runs along, glacier elbow, convergence, supplied என்பதன் இணையான புவியியல், நீரியல் தமிழ் சொற்கள் என்ன? --Rnarendr 21:22, 19 நவம்பர் 2008 (UTC)Reply

fjord - தமிழில்?

தொகு

fjord என்பதை கடலேரி அல்லது கடல்நீரேரி எனலாமா?--ரவி 20:14, 19 நவம்பர் 2008 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அலேட்ச்_பனியாறு&oldid=310106" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அலேட்ச் பனியாறு" page.