பேச்சு:அலைபாக்டீரியா
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic கலைச்சொற்கள்
கலைச்சொற்கள்
தொகுகட்டுரையில் உப்பிறப்புவளி நிலைத்தல் (nitrogen fixation), காலகமாக்கல் (nitrification), காலகநீக்கம் (denitrification) என்று குறிப்பிடப்படுகின்றது. nitrification என்பதை நைதரசனாக்கம், என்றும், denitrification என்பதை நைதரசனீக்கம் என்றும், nitrogen fixation என்பதை நைதரசன் நிலைநிறுத்தம் என்றும் கூறுவது நல்லது எனத் தோன்றுகின்றது. நைதரசன் (அல்லது நைட்ரசன்) என்றே கூறலாம் என்ற கருத்து உள்ளது. நல்ல தமிழில் இவற்றை எல்லாம் அழைக்கலாம், இயலாது என்று அல்ல, ஆனால் "பொதுமை" கருதி நைட்ரசன் அலல்து நைதரசன் என்றே அழைக்கலாம் என்பது மற்றொரு கருத்து. தமிழ் விக்கிப்பீடியாவில் கூடியமட்டிலும் சீரான கலைச்சொல்லாட்சி இருப்பது நல்லது. எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.--செல்வா 01:51, 22 சூன் 2011 (UTC)
- ஐயா, பெயர்கள் தமிழில் இடப்பட்டவற்றிற்கு சொற்பிழையே, பொருட்பிழையோ இல்லையென நினைக்கிறேன். மேலும், நீங்கள் குறிப்பிட்டதுப்போல நைதரசன்/உப்பிறப்புவளி என மாற்றம் கொடுத்துள்ளேன். எனதுத் தாழ்மையானக் கருத்து ஒருச் சொல்லிற்குத் தமிழ்ப்பெயர்த் தென்பட்டால் அதனை நீங்கள் குறிப்பிட்டதுப் போல் பொதுமைப் பெயரையும் அதற்கு இணையான நன் தமிழ்ப் பெயரையும் சேர்த்து அதன் அருகிலேயேக் குறிப்பிட்டுவர காலத்தைக் கடந்தும் பதத்தை இட்டுச்செல்ல இயலும் என நினைக்கிறேன். நன்றிகளுடன். --சிங்கமுகன் 13:37, 22 சூன் 2011 (UTC)
- மிக்க நன்றி சிங்கமுகன். கட்டுரையில் மிகச்சிறு உரை தி. செய்துள்ளேன் (நைதரசன் என்றும்.. இன்னொரு இடத்தில் "அணுவும் அசையாது" என்னும் தொடரை நீக்கி இன்றியமையாதது என்று மாற்றியுள்ளேன்). மிக்க நன்றி. --செல்வா 04:33, 23 சூன் 2011 (UTC)