பேச்சு:ஆரி பாட்டர்
The article's name needs to be changed to 'ஹாரி பாட்டர்'. I am not too sure how to change the article name - can anyone help?--Nmadhubala 08:50, 18 பெப்ரவரி 2007 (UTC)
ஹரி போட்டர் என்பது ஈழத்து உச்சரிப்பு. ஹாரி பாட்டர் என்பது உத்தியோகபூர்வமானது என்று குறிப்பிடுகிறீர்கள். அது எவ்வாறு? --கோபி 09:12, 18 பெப்ரவரி 2007 (UTC)
- தமிழில் திரைப்படமாக வெளிவந்த போது 'ஹாரி பாட்டர்' என்ற பெயரே பயன்படுத்தப்பட்டது. அதைக் கருதியே இம்மாற்றத்தைச் செய்தேன். --Nmadhubala 09:22, 18 பெப்ரவரி 2007 (UTC)
Harry Potter தமிழில் ஹரி பாட்டர் (தமிழக வழக்கு), ஹரி பொட்டர் (ஈழ வழக்கு) சரியானவை. ஹரி போட்டர் என்பது தவறு. ஹரி பாட்டர் தலைப்பை முன்னிலைப்படுத்தலாம்.--Kanags 09:25, 18 பெப்ரவரி 2007 (UTC)
தமிழில் மொழி மாற்றி வெளியிடப்படும் படங்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக கருத இயலுமா தெரியவில்லை. பல சமயங்களில் வேடிக்கையான தமிழப் பெயர்கள் வைக்கிறார்கள். தவிர, இது நூல். திரைப்படமல்லை. தமிழில் நூல் வந்திருந்தால் அதை அதிகாரப்பூர்வமாக கருத வழி உள்ளது. எனினும் Harry என்பதில் ஒரு வகை நெடில் ஒலி இருக்கிறது (அது ஆகாரமும் இல்லை). அதை கருதி ஹாரி பாட்டர் என்று தலைப்பு வைக்கலாம்.--Ravidreams 09:26, 18 பெப்ரவரி 2007 (UTC)
- இரவியின் கருத்துடன் உடன்படுகிறேன்.--Kanags 09:36, 18 பெப்ரவரி 2007 (UTC)
- நானும் இரவியின் கருத்துடன் உடன்படுகின்றேன். Adams, Andrew, Harry, Hamilton முதலான சொற்களில் உள்ள முதல் உயிர்மெய் எழுத்து நெடில் ஒலி.அது அகர நெடிலும் அல்ல (ஆகாரம் அல்ல), எகர நெடிலும் அல்ல (ஏகாரம் அல்ல) ஆனால் இரண்டிற்கும் இடைப்பட்ட ஒர் ஒலி. ஆனால் நெடில் என்பதில் ஐயம் இல்லை. தமிழ் மொழியில் குறில் ஒலி இட்டு எழுதினால் திரிபு சற்று அதிகமாய்த் தெரியும் (தமிழில், நெடில் குறில் என்னும் வேறுபாடு மிகவும் இன்றியமையாத ஓர் ஒலிச்சிறப்பு. வட இந்திய மொழிகளில் எகர, ஒகரக் குறில்கள் இல்லை. ஆங்கிலம் போன்ற ஒலிப்பாங்கில்லா மொழிகளில் ஒலிப்பு மரபால் மட்டுமே நெடில் குறில் ஒலிகளை உணர்த்துவர். நெடில் குறில் என்பதில், அவர்களுக்குத் தமிழ் போலும் தெளிவான இலக்க்ணக் கட்டுப்பாடுகள் நூல்வழி கிடையாது எனினும், பேச்சொலியில் உண்டு. இதனை பலுக்கல் (உச்சரிப்பு) குறியீடுகள் வழி உணர்த்துவர். Harry என்பது ஹாரி என்பதே பொருத்தமுடையது. Hurry என்பதை ஹரி என்பது பொருந்தும். --செல்வா 16:00, 18 பெப்ரவரி 2007 (UTC)
hurry என்பது ஹறி என்றே உச்சரிக்கப்படும் என்று நினைக்கிறேன். கோபி 17:12, 19 பெப்ரவரி 2007 (UTC)
ஹரி பொட்டர் என்பது சரியாக இருக்குமா?--ஜெ.மயூரேசன் 06:52, 21 பெப்ரவரி 2007 (UTC)
- மயூரேசன், போட்டர் என்பது Porter பெயருக்குத்தான் மிகவும் பொருந்தும். ஈழ வழக்கில் ஹரி பொட்டர் தான் சரியானது. எனவே அதற்கு வழிமாற்றுங்கள். ஆனால் ஹரி பொட்டரையா அல்லது ஹாரி பாட்டரையா முன்னிலைப்படுத்துவது என்பதில் நீங்களே முடிவெடுங்கள்:)--Kanags 08:10, 21 பெப்ரவரி 2007 (UTC)
Start a discussion about ஆரி பாட்டர்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve ஆரி பாட்டர்.