பேச்சு:இசுக்கார்பரோ நகர் நடுவம்

புதிய சொற்கள்

தொகு
  • Shopping Mall - பேரங்காடி
  • Town Centre - நகர் நடுவம்

மற்ற பயனர்களின் கருத்துகள் வேண்டப்படுகின்றன.--சிவக்குமார் \பேச்சு 03:50, 10 ஆகஸ்ட் 2008 (UTC)

பேரங்காடி என்பது நல்ல பொருத்தமான பெயர். Town Centre, Down town, Centraville என்பதற்கு கருநகர், நகர்நடு, கடைத்தெரு, நடுப்பாடி என்று ஏதேனும் ஒன்றை வழங்கலாம். சிலப்பதிகார உரையில், பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப என்று வருகின்றது. அங்கே பாடி என்றால் நகரம். (பொதுவாக படையாட்கள் தங்கும் இடம் பாடி எனப்படும், ஆனாலும் பாடி என்பது ஊர், நகரம் என்றும் பொருள் பெறும்). --செல்வா 04:48, 10 ஆகஸ்ட் 2008 (UTC)
நன்றி செல்வா! Down Town என்பதற்கு கருநகர் பொருத்தமாக இருக்கும்.--சிவக்குமார் \பேச்சு 04:57, 10 ஆகஸ்ட் 2008 (UTC)

shopping mall போகும் நவீன நகர்ப்புற இளந்தலைமுறைக்கு பேரங்காடி என்ற சொல் வாயில் நுழையுமா? :( கடையகம் என்றால் என்ன? தற்காலத்தில் downtown, town centre இரண்டும் ஒரே பொருளில் இருந்தாலும் down town என்ற பெயருக்கான வரலாற்றுக் காரணங்கள் இருப்பதால் அதற்குத் தனிச்சொல் இருப்பது நன்று. down town = கீழ் நகர் எனலாமா? --ரவி 11:57, 10 ஆகஸ்ட் 2008 (UTC)

Return to "இசுக்கார்பரோ நகர் நடுவம்" page.