பேச்சு:இந்தியப் பெருங்கடல்
இக்கட்டுரை இங்கே ஆங்கில விக்கிபீடியா கட்டுரையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதில் பல மொழிபெயர்ப்பு பிழைகள் இருக்கிறது. சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். - வைகுண்ட ராஜா 21:46, 15 ஜூன் 2006 (UTC)
- தலைப்பை இந்தியப் பெருங்கடல் என மாற்ற வேண்டும். இந்து என்பது தவறான பொருளைத்தரும். (கிறித்துவக் கடல், இசுலாமியக்கடல் என்பது போல). இந்திய மாக்கடல் என்றோ, இந்தியப் பெருங்கடல் என்றோ இருந்தால் நலமாக இருக்கும்.--C.R.Selvakumar 00:45, 16 ஜூன் 2006 (UTC)செல்வா
- செல்வாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். ----சிவகுமார் 04:44, 16 ஜூன் 2006 (UTC)
- தலைப்பை இந்தியப் பெருங்கடல் என மாற்ற வேண்டும். இந்து என்பது தவறான பொருளைத்தரும். (கிறித்துவக் கடல், இசுலாமியக்கடல் என்பது போல). இந்திய மாக்கடல் என்றோ, இந்தியப் பெருங்கடல் என்றோ இருந்தால் நலமாக இருக்கும்.--C.R.Selvakumar 00:45, 16 ஜூன் 2006 (UTC)செல்வா
- 'இந்து சமுத்திரம்' என இதற்கு தலைப்பிடப்பட்டிருப்பது எனக்கும் சற்று முரணாகத்தெரிகிறது. ஆனால் இது 'இந்து மஹா சமுத்திரம்' என வரைபடங்களில் குறிப்பிடப்பட்டுப்பதை பார்த்திருக்கிறேன். அதனால் அவ்வாறு குறிக்கலாம். ஆனால் அப்பெயரின் பாகங்களை முற்றிலும் தமிழ் மயமாகும் போது முரண்படும். அதனால் பயனர்:C.R.Selvakumar குறிப்பிடும் 'இந்தியப் பெருங்கடல்' என்னும் பயன்பாடு சரியாக இருக்கும். மேலும் இக்கட்டுரையின் தவறான தமிழ் பயன்பாடுகளை பயனர்கள் கவனித்து சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். (எனக்கு இலக்கண விதிகள் தெளிவு இல்லை).
மேலும் பொதுவாக கட்டுரை எழுதும் போது தமிழ் பதங்களை பயன்படுத்துவது நலம். குறிப்பாக கட்டுரைகளின் தலைப்புகளிலாவது ஸ, ஷ, ஜ போன்ற தமிழ் அல்லாத எழுத்துக்களை உள்ளடக்கும் பதங்களை தவிர்த்து முற்றிலும் தமிழாக்கப்பட்ட பயன்பாடுகளே மேல் என்பது எனது கருத்து. - வைகுண்ட ராஜா 19:52, 16 ஜூன் 2006 (UTC)
கீழ் கொடுக்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்புகள் தவறேல் கட்டுரையில் சரி செய்யவும். இங்கேயும் மாற்றினால் நன்று. மேலும் கட்டுரைகளில்(வார்த்தை தமிழாக்கங்கள்) மொழிபெயர்ப்புகளை இன்னும் பண்படுத்த முயற்சி செய்யதால், நன்று - வைகுண்ட ராஜா 21:33, 16 ஜூன் 2006 (UTC)
- water body - நீர்த்தொகுதி
- Sunda islands - சுண்டா
- antartic - அன்டார்டிக்
- Cape Agulhas - அகுல்ஹஸ்
- Comoros - கொமொறோஸ்
- Seychelles - சிசிலீஸ்
- Maldives - மாலத்தீவு
- Mauritius - மோரீஷியஸ்
- transit route - கடவுப் பாதை
- continental shelf - கண்டவிறுதிப்பாறை
- Mid-Oceanic Ridge - கடல்-நடு இடைவரைமேடு அல்லது ஆழ்-கடல் இடைவரைமேடு
- Trench - அகழி
- pelagic - பீலாஜிக்
- Glacial outwash பனிப்படலங்கள்
- equator - நில நடுக்கோட்டின்
- souther - தென்னக
- hemisphere - அத்தகோளம்
- Mauritius - மொரீஷியஸ்
- Hydrology - நீர் பரப்பாராய்ச்சி
- Zambezi - சாம்பெசி
- Shatt-al-Arab - சட்-அல்-அரபு
- Indus - சிந்து
- Ayeyarwady River - அயேயர்வாடி நதி
- Currents - நீர் ஓட்டங்கள்
- circular currents - வட்ட- நீரோட்டங்கள்
- clock-wise - கடியாரப் பாதை
- anti-clock-wise எதிர்-கடியாரப் பாதை
- salinity - உப்புத்தன்மை
- Pack ice - பனித் தொகுதிகள்
- ice bergs - பனிப் பாறைகள்
- petroleum - எரிஎண்ணை
- Land of Punt - புன்ட்
- Mesopotamia - மெசப்பொட்டாமியா
- en:Cyzicus - சிசீக்கஸ்
- en:Eudoxus - யுடோக்சஸ்
- Vasco da Gama - வாஸ்கோ-ட-காமா
- Cape of Goodhope - குட் கோப் முனை
- Suez Canal - சூயஸ் கால்வாய்
- International Hydrographic Organization - சர்வதேச நீர் பரப்பாராய்ச்சி அமைப்பு
- Gulf of Aden - ஏதென் வளைகுடா
- Mozambique - மொசாம்பிக்
- மMalacca - லாக்கா நீரிணைவு
- Oman - ஓமன்
- tropical cyclones - வெப்பமண்டல சூறாவளி
- Richards Bay - ரிச்சார்ட்ஸ் பே
நிலவுலகின் நெடுவரை-கிடைவரைக் கோடுகள்
தொகுதீர்க்க ரேகை அட்ச ரேகை என்பவற்றிகுப் பதில் நெட்டாங்கு(நெடுங்கோடு), அகலாங்கு(அல்லது அகலக்கோடு)என்பவற்றைப் பாவிக்கலாமா? - காயத்திரி 02:40, 23 பெப்ரவரி 2007 (UTC)
- உங்கள் சிந்தனை சரியானதே. ஆனால் நெடுவரை, கிடைவரை என்பனவற்றைப் பரிந்துரைப்பேன். நெடுங்கோடு என்பதே நெடுவரை (தெந்வடலாக முனை வழி செல்லும் கோடுகள்), கிழக்கு-மேற்காகச் செல்லும் கோடுகள் கிடைவரை .--செல்வா 02:47, 23 பெப்ரவரி 2007 (UTC)
பக்கத்தின் தலைப்பைத் திருத்த வேண்டும். சரியான தலைப்பு: இந்தியப் பெருங்கடல்