பேச்சு:இந்தியாவின் தட்பவெப்ப நிலை

இது தட்ப வெப்ப நிலை என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன். கால நிலை என்பது பொருந்தாது என நினைக்கிறேன்--C.R.Selvakumar 15:10, 4 ஜூலை 2006 (UTC)செல்வா

Weather - வானிலை? தட்ப வெப்ப நிலை?
Climate - காலநிலை? தட்ப வெப்ப நிலை?--ரவி 09:16, 6 ஜூலை 2006 (UTC)

இக்கட்டுரையை இந்தியாவின் வானிலை என்று மாற்றலாமா? --செல்வா 19:43, 3 ஜனவரி 2008 (UTC)

  • வானிலை என்பதில் தினமும் மற்றம் இருக்கும் ஆனால் காலநிலையில் இவ்வாறு மற்றங்கள் எதுவும் ஏற்ப்படது.

இன்னும் சொல்லப்பொனல் காலநிலையில்(Climate) பருவங்கல்(Seasons) அடங்கும், பருவங்களுக்கு (Seasons) ஏற்றவாரு வாநிலை (Weather) மாறும்.--Rnarendr 04:44, 4 ஜனவரி 2008 (UTC)

காலநிலை என்பது காலத்தை மட்டும் தனியாகக் குறிப்பிடுவதால் நேரம் என்று குழம்ப நேரிடுகின்றது. குளிர்காலம், இளவேனிற்காலம், கோடைகாலம், இலையுதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம் என்பதில் எல்லாம உள்ள காலம் என்பது நேரத்தைத் தான் குறிப்பிடும். குளிர், கோடை, முன்பனி முதலான முன்னடை மொழிகள் தட்பவெப்பநிலைகளை உணர்த்துவன. பருவகாலம் என்பதும் ஒரு குறிப்பிட்ட காலஇடைவெளியில் நம்மைச் சூழ்ந்திருக்கும் தட்பவெப்பநிலை, பயிர் பச்சைகள் எல்லாம் மாற்றம் அடைந்திருக்கும் நிலையைக் குறிக்கும். தனித்து காலம் என்று வருவது சரியாகப் படவில்லை. தட்பவெப்பக் காலநிலை என்று இருப்பது நல்லது (நீளமாக இருந்தாலும்). எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.--செல்வா 15:43, 7 ஜனவரி 2008 (UTC) பொதுவாக இந்தியாவின் தட்பவெப்பம் என்றாலும் climate என்றே பொருள்படும். இது வழக்கில் இருக்கும் ஆட்சி என்றே நினைக்கிறேன். --செல்வா 15:46, 7 ஜனவரி 2008 (UTC)--செல்வா 16:09, 7 ஜனவரி 2008 (UTC)

நீங்கள் சொன்னதுபோல நான் இக்கட்டுரையை தொடருகிறேன். தயவுகூர்த்து நான் எழுதும் ஆங்கில வார்த்தைகளை அதற்கு இணையான தமிழ் வார்த்தைகளாக மாற்றி விடவும்--Rnarendr 02:47, 8 ஜனவரி 2008 (UTC)

தலைப்பு காலனிலையா வானிலையா

தொகு

உங்கள் கருத்துக்களை பார்த்தேன், நானும் இங்குள்ள பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் புவியில் புத்தகங்களை புரட்டிப்பார்த்தேன். அதில் ஒருபுறம் காலநிளைக்கேர்றவாறு தட்பவெப்பநிலை மற்றும் வானில மாறும் என்றும் மற்றொருபுறம் தட்பவெப்பநிலை என்னும் சொல்லை காலநிலை என்ற சொல்லுக்கு பதிலாக பயன் படுத்தப்பட்டுள்ளது. எனக்கு தெரிந்த தமிழ் மற்றும் புவியில் ஆசிரியர்களிடம் விசாரித்ததில் என்னால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை.

When I see this topic in broad and generalised view I come to an conclusion that Temperature (தட்பவெப்பம்), Weather (வானிலை), Seasons (பருவ காலம்) are the phenomena under the main topic Climate (காலநிலை). We might need some help from our friends in Wiki to have more suggestion regarding this topic. --Rnarendr 03:57, 8 ஜனவரி 2008 (UTC)

தட்பவெப்பம் என்பது Temperature அல்ல!! தட்பம் என்பது குளிர்நிலையைக் குறிக்கும். வெப்பம் என்பது வெப்பநிலையைக் குறிக்கும். தட்பவெப்பம் என்பது இவ்வேறுபாடுகளால் உள்ள சூழ்நிலை,காரணிகள் எல்லாவற்றையும் குறிக்கும். அதுதான் Climate. தட்பவெப்பம் என்று கூறும்பொழுது "நிலை" என்று கூறத்தேவை இல்லை. வெப்பநிலை, குளிர்நிலை, தட்பவெப்பம் என்பன வெவ்வேறானவற்றைக் குறிக்கும். Please understand that Temperature is வெப்பநிலை and don't mix up this with தட்பவெப்பம். The tamil terminology அடிதடி , தட்டுமுட்டு, வெட்டுகுத்து, and numerous such expressions mean not the individual words in those "compund word", but they mean like "disturbance/turmoil", "household things", "violent orgy" etc. In short they are sort of idiomatic (with some underlying rationale) expressions (with Tamil semantic conventions) --செல்வா 04:10, 8 ஜனவரி 2008 (UTC)
உங்கள் கருத்துக்களை நான் ஒப்புக்கொள்கிறேன் ஆனாலும் தட்பவெப்பம் என்பது Temperature அல்ல என்ற உங்கள் கருத்தில் எனக்கு ஒரு ஐயம் உள்ளது. தங்கள் கூறியதுபோல தட்பவெப்பம் சொல் குளிர் மற்றும் வெப்ப அளவினை குறிக்கும் சொல். அதாவது இங்கு குளிர் என்னும் சொல் வெப்பநிலையின் குறைந்த அளவையும் வெப்ப சொல் வெப்பநிலையின் அதிக அளவையும் குறிக்கிறது என்பதே என் கருத்து. இதற்கு எடுத்துக்காட்டாக மேலும் கடலுக்கடியில் உள்ள சூழ்நிலையை தட்பவெப்பத்தால் (low and high temperature) ஆராயப்படுகிறது. Climate என்னும் சொல் கடலின் மேல்மட்டத்திலிருந்து வளி மண்டலத்தின் பகுதி (stratosphere) வரையுள்ள இடத்தில் ஏற்படும் வளி மண்டல மாற்றங்களை தனக்குள் அடக்குகிறது. A term/word defining relative difference between a maximum and minimum temperature cannot be considered as a word equivalent to Climate--Rnarendr 05:11, 8 ஜனவரி 2008 (UTC)
உங்களிடம் அ.கி. மூர்த்தி அவர்களின் அறிவியல் அகராதி இருந்தால் climate என்னும் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் என்ன என்று பாருங்கள். இவ்வகராதியில் கலைச்சொற்கள் ஆங்கில வரைசைப்படி தந்து அதற்கு நிகரான தமிழ்ச்சொற்களும் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. பக்கம் 133ல் climate (கிளைமேட்) = தட்பவெப்ப நிலை. அடுத்ததாக "க்ரியா"வின் தற்கால அகராதியில் பக்கம் 498 இல் தட்பவெப்பம் = climate என்று கொடுத்துள்ளார்கள். நான் பள்ளியில் படித்த நாட்களிலும் (பல பத்தாண்டுகளுக்கு முன் :) ) தட்பவெப்பம் என்பது பிற்காலத்தில் நான் புரிந்து கொண்ட climate என்பதற்கு இணையாகத்தான் பயன்படுத்தினார்கள். எனவே தட்பவெப்பம் என்பது கட்டாயம் climate என்பதுதான். நீங்கள் எங்கிருந்து " defining relative difference between a maximum and minimum temperature" என்னும் கருத்தைப் பெற்றீர்கள் என்று தெரியவில்லை. அது சரியல்ல என்பது என் கருத்து. காலநிலை என்னும் சொல்லை மாற்றி தட்பவெப்பம் என்று குறிப்பது சரியாக அமையும். இவற்றை நீங்கள் நம்பவில்லை என்றாலும், கூகுளில் தேடியும் பார்க்கலாம் (கூகுள் முடிவுகள் எப்பொழுதும் சரியாக இருக்கும் என்று கூறமுடியாது, ஆனால், பிறர் என்ன பொருள்களில் ஆண்டுள்ளார்கள் என்று ஒரு கண்ணோட்டம் விட உதவும்.). நான் இங்கு தந்துள்ள சான்றுகோள்கள் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன். தட்பவெப்பம் போலவே, போக்குவரத்து, பேச்சுவார்த்தை, பேத்துமாத்து என நூற்றுக்கணக்கான சொற்கள் தமிழில் உண்டு (இரா இளங்குமரனின் இணைச்சொல் அகராதி என்னும் நூலையும் பாருங்கள். கழக வெளியீடு). தமிழில் சொற்பொருள் கொள்ளும் முறைமை (பொருள் கோண்மை) உணர்ந்தால் நீங்கள் தட்பவெப்பம் என்பது எப்படி கிளைமேட் என்பதைக் குறிக்கும் என்பதை உணரலாம்.--செல்வா 18:20, 13 ஜனவரி 2008 (UTC)
ஐயா.. என்னை தவறாக நினைக்க வேண்டாம். இங்கு நான் நம்புகிறேன், நான் நம்பவில்லை என்ற கருத்திற்கே இடம் இல்லை.My main aim is to deliver a standard article about Indian Climate in Tamil. எனக்கு தெரிந்த சில தமிழ் மற்றும் புவியியல் பேராசிரியர்களின் உதவியுடன் நான் இக்கட்டுரையை எழுதி வருகிறேன். நீங்கள் கூறுவதை போல நான் கூகிள் தேடலை நம்பியதில்லை. ஆங்கிலத்தைபோல தமிழிலும் ஒருசொல் பலபொருள் கொண்டுள்ளது. கிளிமடே என்பதற்கு தட்பவெப்பத்தை தவிர வேறு ஏதேனும் சொல்லுள்ளதா என்று கூறுங்களேன் --Rnarendr 11:53, 21 ஜனவரி 2008 (UTC)
நான் அகராதியில் இருந்தும், நான் பள்ளியில் படித்த நாட்களில் இருந்தும் சான்றுகளுடன் தந்த சொற்களை நீங்கள் ஏற்க மறுப்பது வியப்பாக உள்ளது. காலநிலை என்பது தவறான பொருள் தருகின்றது. காலம் என்பது நேரம்தான். இதன் விளக்கத்தை நான் முன்னமே தந்துள்ளேன். நீங்கள் climate என்பதாற்கு வேறு ஒரு சொல் ஆங்கிலத்தில் சொல்லுங்கள் (இல்லை என்ற பொருளில் கேட்கவில்லை, ஆனால் அதே பொருள் தருமா என்று எண்ணிப்பாருங்கள்). அகராதியில் தட்பவெப்பம் என்னும் சொல் இருப்பதால் மட்டுமோ, அல்லது அது பலகாலமாக வழக்கத்தில் உள்ள சொல் என்பதால் மட்டுமோ நான் வலியுறுத்தவில்லை. அது மிகப்பொருத்தமான,சரியான சொல். காலநிலை தவறான சொல். என்னால் சில நாட்கள் உடனே மறுமொழி தர இயலாது. நீங்கள் standard article என்றெல்லாம் எதைக்கொண்டு சொல்லுகின்றீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை. --செல்வா 14:35, 21 ஜனவரி 2008 (UTC)
Return to "இந்தியாவின் தட்பவெப்ப நிலை" page.