பேச்சு:இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Kanags
Kanags அவர்களே!
"இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள்" என்றிருந்த கட்டுரையை ஏன் "இந்திய விடுதலைப் போராட்டத்தில் முசுலிம்கள்" என்று மாற்றினீர்கள்? ஒருவேளை "ஸ்" என்பது வடமொழி என்று நீங்கள் வாதிட்டால், விக்கிபீடியாவில் உள்ள மற்ற கட்டுரைகளை ஏன் மாற்றவில்லை?--Abdulbasith27 (பேச்சு) 13:21, 16 திசம்பர் 2014 (UTC)
சகோ Kanags
நானும் அறிந்துக்கொள்ள விரும்புகின்றேன். காரணம், அரபு இலக்கியத்தில் "முஸ்" என்பதே சரியான உச்சரிப்பாகும். சு என்பது உண்மை பதத்தை மாற்றி மற்றொரு வார்த்தையாக குழப்பத்தையே தரும். (பேச்சு)
- இக்கட்டுரை முதன்முதலில் நீக்கப்படும் முன்னர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முசுலிம்கள் என்ற தலைப்பிலேயே இருந்தது. பின்னர் நீங்கள் கட்டுரை முழுவதையும் (பேச்சுப்பக்கம் உட்பட) உங்கள் மணல்தொட்டிக்கு மாற்றினீர்கள். அதன் பின்னர் மீன்டும் புதிய கட்டுரையை இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் என்ற தலைப்பில் எழுதினீர்கள். அதனாலேயே தலைப்பையும் மூலத் தலைப்புக்கு மாற்றினேன். இசுலாம், முசுலிம் எனத் தமிழ் முறைப்படி எழுதுவது வழக்கமாகி விட்டது அல்லது வழக்கமாகி வருகிறது. ஆனாலும், நான் இது குறித்து விவாதிக்க விரும்பவில்லை. நீங்கள் விரும்பினால் மீண்டும் தலைப்பை மாற்றலாம். நன்றி.--Kanags \உரையாடுக 20:19, 16 திசம்பர் 2014 (UTC)