பேச்சு:இயக்குநர் (திரைப்படம்)
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Kanags
- வணக்கம். இப்பக்கத்தினை இயக்குநர் (திரைப்படம்) என்ற தலைப்புக்கு நகர்த்த பரிந்துரை செய்கிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி, 30, மார்ச்சு, 2012.
இயக்குநர், இயக்குனர் இரண்டும் பரவலாக பாவிக்கப்படுகிறது. இவற்றில் எது சரி?--சங்கீர்த்தன் (பேச்சு) 17:15, 21 அக்டோபர் 2012 (UTC)
- இங்குள்ள விளக்கத்தின் படி:
//'இயக்குநர்' என்பதே சரி, 'இயக்கு' என்னும் வினைச்சொல்லைப் பெயர்ச்சொல் ஆக்குவதற்கு 'நர்’ விகுதி சேர்க்க வேண்டும்.
ஓட்டு=ஓட்டுநர், ஆளு(ள்+உ)+நர்= ஆளுநர், பெறு+நர்=பெறுநர்,
அனுப்புநர்= அனுப்பு+நர்,பயிற்று+நர்=பயிற்றுநர், வல்லு(ல்+உ)+நர்=வல்லுநர்.
வந்தனர், ஆடினர், பாடினர்,அழைத்தனர் ஆகிய சொற்களில் வரும் 'ன' பன்மையைக் குறிக்கும்.
அஃறிணையாக இருந்தால் வந்தன, ஆடின, பாடின,அழைத்தன என வரும். இங்கே 'ஆடிநர்', 'ஆடிந' என்று எழுதுவது தவறு.//