பேச்சு:இருத்தல்

Add topic
Active discussions

தலைப்பு மாற்றக் கோரிக்கைதொகு

இந்தக் கட்டுரையின் தலைப்பை இருப்பு என மாற்றலாமா?--கலை (பேச்சு) 21:32, 15 சூன் 2017 (UTC)

 விருப்பமில்லை --AntanO 16:37, 16 சூன் 2017 (UTC)
காரணத்தை அறியலாமா User:AntanO? ஏன் விருப்பமில்லை என்று தெரிந்தால் நல்லது. இருத்தல் என்னும்போது, அது sitting என்பதுபோல் தெரிகிறது. Existence க்கு பொதுவாக இருப்பு என்றே பயன்படுத்துவதாகத் தெரிகிறது. தமிழ் விக்சனரியிலும் அவ்வாறே உள்ளது. --கலை (பேச்சு) 21:20, 22 சூன் 2017 (UTC)
Existence என்பது இருத்தல், இருப்பு எனப்படும். இருப்பு என்பதை வழிமாற்றாக ஏற்படுத்தலாம். மேலும், Existence என்ற மெய்யில் சொல்லின் பொருளை தமிழில் சரியாகத் தெரிவிக்கும் சொற்கள் இருப்பதாகத் தெரியவில்லை. மெய்யியலுக்கான தமிழ்ச்சூழலில் Existence என்பதை இருத்தல் என்றே பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் இருப்பு என்பதும் விளங்கிக் கொள்ளத்தக்கதே. குழப்பத்தைத் தவிர்க்க, இருத்தல் (மெய்யியல்) எனவும் பெயரிடலாம். மேலும், விக்சனரியில் உள்ள சொல் உசாத்துணையற்று உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பு என்பது வணிகச் சொற்களிலும் பயன்படுத்தப்படுவதுண்டு. உ-ம்: மொத்த இருப்பு. --AntanO 05:43, 28 சூன் 2017 (UTC)
existentialism என்பது இருத்தலியல் எனப்படுகிறது, இருப்பியல் என்றல்ல என்பதையும் கவனியுங்கள். --AntanO 05:46, 28 சூன் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இருத்தல்&oldid=2320090" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இருத்தல்" page.