பேச்சு:இருபடிச் சமன்பாடு
இரண்டு கருத்துகள்
தொகு- இருபடி என்பதை இருபடிய என்று எழுதுவது சரியாக இருக்கும். தேசம்-தேசிய, சிறு-சிறிய, பெரு-பெரிய, அழகு-அழகிய என்பன போல் -இய என்னும் பின்னொட்டு இட்டால் இயல்பாய் இணங்கி வரும். இருபடியச் சமன்பாடு என்றால் சரியாக இருக்கும். இருமடியச் சமன்பாடு என்றும் கூறலாம்
- லெக்ராஞ்சி என்று உள் தலைப்பு இருக்கின்றது, ஆனால் முதல் வரியிலேயே லாக்ராஞ்சி என்று வருகின்றது. ஏதாவது ஒன்றைத் தேர்ந்து சீராக அதே வடிவில் Joseph-Louis Lagrange அவர்களின் பெயரைக் குறிக்கலாம். லெக்-லாக் என்பதற்கு மாறாக லெகுராஞ்சி-லாகுராஞ்சி-லகுராஞ்சி என்றோ இலகுராஞ்சி என்றோ கூறலாம். க் என்பது எப்பொழுதும் வலித்து ஒலிக்கும் வல்லினமாகவே தமிழில் வரும் (எல்லா வல்லின ஒற்றுகளும் அப்படியே). எப்படி இருப்பினும், ஒரே சீராக ஒரு கட்டுரைக்குள்ளாவது வருதல் நலல்து.
--செல்வா 15:36, 29 பெப்ரவரி 2012 (UTC)