பேச்சு:இறகு

Add topic
Active discussions

காளை, பசு என்பது போல் மயில்களுக்குத் தனிப் பெயர்கள் இல்லையா? ஆண் மயில், பெண் மயில் என்பது உறுத்தலாக இருக்கிறது. தமிழகத்தில் தொன்று தொட்டு இருக்கும் விலங்குகள், பறவைகளுக்கு இரு பால் பெயர்களும் புழங்கியிருக்கும், இலக்கியத்தில் பதிவாகி இருக்கும் என்று நினைக்கிறேன். இது குறித்த பட்டியல் ஒன்றை விக்சனரியில் சேர்க்க முடியுமா?--ரவி 20:25, 5 ஏப்ரல் 2008 (UTC)

பெண் மயிலுக்கு அளகு என்று பெயர், ஆண் மயிலுக்குச் சேவல் என்று பெயர். ஆந்தையின் பெட்டைக்கும் அளகு என்று பெயர். இவை பெட்டை என்பது போன்ற பொதுவான பெயர் - பொதுவாக கோழி, மயில் ஆந்தை ஆகிய பறவைகளுக்கு ஆளப்படும். --செல்வா 00:13, 6 ஏப்ரல் 2008 (UTC)

இறகு-சிறகு-இறக்கை-தோகைதொகு

இறகு-சிறகு-இறக்கை-தோகை - வேறுபாடுகள் என்ன?--ரவி 20:28, 5 ஏப்ரல் 2008 (UTC)

இது பற்றி கட்டுரையில் விரிவாக இன்றுதான் எழுத வேண்டும் என்று எண்ணினேன்! இறகு என்பது விலங்குகளின் மயிர் அல்லது முடி போன்று பறவைகளுக்கு உள்ள தனிச்சிறப்பான, தோலின் மேல் வளரும், கெரட்டின் (ஒருவகைப் புரதப் பொருள்) பொருள். நம் கைவிரல்களில் உள்ள நகமும் இந்த கெரட்டின் பொருளால் ஆனதுதான். சிறகு, சிறை என்பன கை போன்று பக்கவாட்டில் தோளில் இருந்து விரியும் உறுப்பு. மீன், பறவை போன்ற விலங்குகளுக்கு சிறை என்பர். இறக்கை என்பது உண்மையில் இறகுகளால் ஆன கைபோன்று விரிந்து உள்ளபகுதி. இது பறப்பதற்குத் பயன்படுவன. இறகுகளால் ஆகாத சிறகுகளுக்கும் பொதுப்பட "இறக்கை" என்கிறோம். வானூர்திக்கும் "இறக்கை" என்கிறோம். பட்டாம்பூச்சிகளுக்கும் இறக்கை என்கிறோம். எனவே பொதுப்பொருள் கொண்டுவிட்டது. எனவே சிறகு, இறக்கை என்பன ஒன்றே. இறகு என்பது மயிர், முடி போன்று தோலின் மேல் இழை இழையாக பறவைகளுக்கு மட்டுமே வளரும் ஒன்று. இதில் மிக மென்மையாக, தோலை ஒட்டி இருக்கும் பகுதியில் உள்ளதைத் தூவி என்பார்கள். ஆங்கிலத்தில் இதனைத்தான் down என்பார்கள். கூரல், கூழை, என்பனவும் இறகின் பெயர்கள். தோகை என்பது இறகுகளால் ஆன வால் போன்ற நீளமான பின் பகுதியைக் குறிக்கும். எல்லாப் பறவைகளுக்கும் வால் போன்ற பின் இறகுகள் உண்டு, ஆனால் மயிலுக்கும், மற்றும் வேறு சில பறவைகளுக்கும் சற்று நீண்டு இருக்கும். --செல்வா 22:04, 5 ஏப்ரல் 2008 (UTC)

பீலி என்பது மயிலின் அழகு மிக்க இறகுக்குப் பயன்படுத்தும் சொல். மயிலின் தலையில் உள்ள கொண்டையில் உள்ள இறகுகளுக்கு சூட்டு, குஞ்சி, துச்சில் என்று பல பெயர்கள் உண்டு. மயிலின் கூவலுக்கு அகவுதல் என்று பெயர். மயில்கள் தங்களின் வாழிடங்களை வரையறை செய்து காக்கும். அதற்கு கட்சி என்று பெயர். --செல்வா 22:18, 5 ஏப்ரல் 2008 (UTC)

விரிவான தகவல்களுக்கு நன்றி செல்வா.--ரவி 06:57, 6 ஏப்ரல் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இறகு&oldid=227913" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இறகு" page.