பேச்சு:இறம்புட்டான்

Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்

இதனை இரம்புட்டான் என எழுதலாமா? --செல்வா 15:31, 5 திசம்பர் 2010 (UTC)Reply

செல்வா. நீங்கள் சொல்வது சரியே.ஆயினும் தேடுபவர்களுக்கு வசதியாக றம்புட்டான் பக்கவழிமாற்று செய்யலாம். இன்னொரு சம்பவம் தமிழ் வரிவடிவப்படுத்தல் தொடர்பிலானது.இலங்கையில் நிகழ்ந்தது. ஒருமுறை Rubber ஐ தமிழ் வரிவடிவப்படுத்தலில் இறப்பர்என்றால் சாவர்;இரப்பர்என்றால் பிச்சை கேட்டல். இறுதியில் றப்பர் என்றே வழங்க முடிவெடுத்தனர்.--சஞ்சீவி சிவகுமார் 17:04, 5 திசம்பர் 2010 (UTC)Reply

நீங்கள் கூறும் இரப்பர், இறப்பர் போன்ற "குழப்பங்கள்" வருவது இயற்கையே. அதற்காக அப்படிச் செய்ய வேண்டாம் என்பது சரியான முடிவல்ல என்பது என் கருத்து. தமிழ்ச்சொல்லாகிய கரி என்பது அடுப்புக்கரியையும் குறிக்கும், யானையைக் குறிக்கும், சாட்சியைக் குறிக்கும். மொழியியலில் ஒரே சொல் பல பொருள்கள் கொண்டிருக்கலாம். ஆங்கிலத்தில் இதனை homonym என்பர். தமிழில் பல்பொருள் ஒருமொழி, ஒருபொருட்பன்மொழி என்பன உண்டு. ஒரேயொரு வேறுபாடு, இங்கு இரப்பர் அல்லது இறப்பர் என்பது வேறுபொருள் தரும் வேற்றுமொழிச் சொல். தமிழில் சில சொற்கள் எதிரெதிர் பொருளும் கொண்டிருக்கும். இந்தியில் "கல்" (कल) என்றால் நேற்று என்றும் நாளை என்றும் பொருள் தரும். நான் இரம்புட்டான் என்று எழுதலாமா என்று கூறியதற்குக் காரணம் (1) தமிழ் முறைப்படி முன்னே உயிரொலி வருவது நல்லது (இயல்பாய் இது நிகழ்வது, அதனை முறைப்படுத்தி வைத்தது தமிழ் மொழியறிஞர்களின் அறிவுடைமை). (2) தமிழ் நாட்டில் வளர்ந்தவர்களுக்கு வல்லின றகரம் முதலில் வருவது மிகவும் உறுத்துகின்றது (மிகவும் என்பதை வலியுறுத்துகிறேன்). இது பழக்கம்தான் எனினும், அதையும் தாண்டி ஏதோ இருப்பதாகவே என்னைப்போல் பலர் நேர்மையுடன் உணர்கிறோம். மயூரநாதன் இது வெறும் பழக்கமின்மையே என்று முன்பொருமுறை கூறியுள்ளார். பழக்கமினமி என்பதை உணர்ந்தாலும், அதையும் மீறிய உள்ளுணர்வு ஒன்றும் உள்ளது. விளக்கிக் கூறவியலாது. --செல்வா 00:00, 12 திசம்பர் 2010 (UTC)Reply
செல்வா,பவுள் நீங்கள் சொல்வது சரியே.மொழி அதன் பயனர்களின் வசதியையும் வழக்கையும் அனுசரித்தே அமைய வேண்டும். இறம்புட்டான் என மற்றுவதை நான் மறுக்கவில்லையே. --சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 00:15, 20 திசம்பர் 2010 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இறம்புட்டான்&oldid=731897" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இறம்புட்டான்" page.