பேச்சு:இறைமறுப்பு நோக்கி விமர்சனங்கள்
\\கொலை செய்தாதே, களவு எடுக்காதே, வன்முறை செய்யாதே போன்ற அறக்கோட்பாடுகள் பல கடவுள் என்ற நீதிபதிக்கும் முன்னால் நியாப்படுத்தப்படுகின்றன. கெட்டது செய்யாதவர் நரகம் செல்வர் என்றும் நல்லவர் செய்தவர் சொர்க்கம் செல்வர் என்றும் பலரிடம் நம்பிக்க்கை இருக்கிறது. கடவுள் என்ற நீதிபதி இல்லாமல் எது தர்மம் என்பதை எப்படி தீர்மானிப்பது.\\
நன்மை எது தீமை எது என்பதை கடவுள் குறித்தான நம்பிக்கை தீர்மானம் செய்வதில்லை. இது மிகவும் அபத்த கூற்று. அல்லாஹ் குரானில் அடிமைகளை புரண அனுமதி தந்ததை ஏற்பதும், கடவுளே சொல்லியாகிவிட்டது என்று குற்றம் செய்வதே பெரிய அபத்தமாகும். மனிதனை ஏற்றதாழ்வுடன் அனுகும் இந்து மத சிந்தனைகளின் மூலமே கடவுள் என்பதை யாரும் மறந்துவிட கூடாது.
கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் தங்களின் சிந்தையால் தெளிவு பெற்றவர்கள். சட்டத்தின் அடிப்படையிலான தவறுகள் அவர்களுக்கும் தவறானது.
Sivane (பேச்சு) 06:38, 20 செப்டெம்பர் 2012 (UTC)
- உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. இறைமறுப்பு நோக்கிய விமர்சனங்களை பதிவு செய்வதே இக் கட்டுரையின் நோக்கம். அக் கூற்றுக்கள் தொடர்பான தனிப்பட்ட மதிப்பீடுகளை முன்வைக்க அல்ல. எனினும் இக் கூறுகளுக்கு முறையான மேற்கோள்கள் சேர்க்கப்பட வேண்டும். --Natkeeran (பேச்சு) 13:35, 20 செப்டெம்பர் 2012 (UTC)
- விக்கியில் இறைமறுப்பு குறித்து விமர்சனம் எழுதியமைக்காக யாரேனும் கண்டனத்திற்கு உள்ளானார்களா என்று தெரியவில்லை. ஆனால் மதங்களைப் பற்றிய விமர்சனத்தினை வைக்கும் எனக்கு கண்டனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நடுநிலையில்லையென கட்டுரையை சுட்டி காண்பித்தல் அத்தனை பெரிய குற்றமா விக்கியில்.
Sivane (பேச்சு) 05:13, 21 செப்டெம்பர் 2012 (UTC)
- இக் கட்டுரையில் விரைவில் சான்றுகளுடன் புறவயமாக மேம்படுத்தித் தருகிறேன். --Natkeeran (பேச்சு) 13:37, 21 செப்டெம்பர் 2012 (UTC)
- அப்படியே சமயம் சார்ந்த கட்டுரைகளையும் சற்று கவனிக்க வேண்டுமெ கோரிக்கை வைக்கிறேன். - Sivane (பேச்சு) 17:12, 21 செப்டெம்பர் 2012 (UTC)