பேச்சு:இலக்கணாவத்தை

இலக்கணாவத்தை என்பது உடுப்பிட்டியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். யாழ்ப்பாண வரலாற்றில் சமரபாகு தேவன் என்றவனின் ஆளுகையின் கீழ் இருந்ததால் இது சமரபாகு தேவன் குறிச்சி என அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் அப்பெயர் மருவல் அடைந்து தற்போது இலக்கணாவத்தை எனும் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இங்கு பல கல்விமான்கள் அவதரித்திருக்கிறார்கள். உடுப்பிட்டி வல்வெட்டித்துறைப் பிரதேசத்திலுள்ள ஆலயக் குருமார்கள் அனைவருக்கும் அறிமகமான ஒரு சைவசமயத் தொண்டரான அமரர் இளையதம்பி ஆறுமுகம் என்பவரும் வசித்த இந்த இலக்கணாவத்தை என அழைக்கப்படும் சமரபாகு தேவன் குறிச்சி என்ற இம் மண்ணாகும். இந்த ஊருக்கான “கற்பகத்தான்“ என்ற வலைத்தளமும், “எங்கள் ஊர் இலக்கணாவத்தை“ என்ற முகநூல் குழுமமும் உலகெல்லாம் சிதறுண்டு பரந்து வாழும் அனைத்து மக்களையும் ஒரு சங்கிலியாக இணைத்து வைத்திருக்கிறது. இவ் ஊர் மக்கள் அதிகளவானோர் வசிக்கும் கனடாவில் “இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம்“ என்ற ஒரு ஒன்றியமும் திறம்பட தமது ஊர் அபிவிருத்தி சார்ந்த பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

Start a discussion about இலக்கணாவத்தை

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இலக்கணாவத்தை&oldid=3100160" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இலக்கணாவத்தை" page.