பேச்சு:இலங்கு வானூர்தி விபத்துக்கள்

Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by பெ.நாயகி

இராஜசேகர ரெட்டியின் மறைவுச் செய்தி பற்றிய செய்தித் தொகுப்புகளின் போது பல்வேறு மீடியாக்களிலும் நாளிதழ்களிலும் வந்த செய்திகளைக் கவனமாகத் தொகுத்து ஆங்கில விக்கியிலோ கூகிளிலோ கூட இல்லாத ஒரு தொகுப்பினை முழுமையாகத் தேதி வாரியாகத் தந்துள்ள இந்தக் கட்டுரையை "ஆதாரமற்ற செய்திகளின் அடிப்படையிலான கட்டுரை" என்று முத்திரை இட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.--பெ.நாயகி 16:34, 8 செப்டெம்பர் 2009 (UTC)Reply

பெ. நாயகி, முதலில் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பில் நேரம் செலவிட்டு நல்ல பட்டியல் தொகுப்பைத் தந்தமைக்கு நன்றி. ஆதாரமற்ற கட்டுரை என்ற குறிப்பை தயவுசெய்து தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு இணையத்தளத்தைச் செய்தி ஆதாராமாக குறிப்பிடும் போது குறிப்பிட்ட ஆதாரக் கட்டுரையின் முகவரியும் தருதல் நன்று. இதனால் விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மை கூடும். இத்தகைய கட்டுரைகளை அடையாளம் கண்டு நம்பகத்தன்மையைக் கூட்டி மேம்படுத்த உதவியாகவே இது போன்ற குறிப்புகளைச் சேர்க்கிறோம். இது போல் பல கட்டுரைகள் மேம்படுத்தப்பட வேண்டி உள்ளன. நீங்கள் அந்த இணையத்தளக் கட்டுரை முகவரிகளைச் சேர்த்த பிறகு, "ஆதாமற்ற தகவல்களைக் கொண்டுள்ள கட்டுரைகள்" என்ற குறிப்பை நீக்கி விடலாம். நன்றி. --ரவி 17:04, 8 செப்டெம்பர் 2009 (UTC)Reply

என் உணர்வுக்கு மதிப்பளித்து விளக்கம் தந்ததுடன், என்னைத் திருத்தவும் பகுப்பில் திருத்தமும் செய்த தங்களுக்கு என் நன்றி.--பெ.நாயகி 17:39, 8 செப்டெம்பர் 2009 (UTC)Reply

Return to "இலங்கு வானூர்தி விபத்துக்கள்" page.