பேச்சு:ஈழத்துப் பாடல்களின் பட்டியல்

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99

ஈழத்துப் பாடல்கள் என்பதை எதன் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளீர்கள் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டுகிறேன். இந்தப் பாடல்கள், ஈழத்தின் திரைப்படங்களில் இடம்பெற்றவையா? அப்படியானால் அதனை திரைப்பட கட்டுரைகளிலேயே இணைத்துவிடலாமே? தனிப் பட்டியலாக்க என்ன காரணம்? என்பதையும் இங்கு தெரிவியுங்கள். அத்துடன் இந்தப் பாடல்களைப் பற்றிய செய்திகள் வெளிவந்த செய்தித்தாள்கள் போன்ற அச்சு ஊடகங்களிலிருந்து (நாளிதழ்கள், புத்தகங்கள், நாளிதல் இணைப்புகள்) மேற்கோள்கள் தரவேண்டுகிறேன். இல்லையென்றால் குறிப்பிடத்தக்க கட்டுரை அல்லாமல் போக இக்கட்டுரைக்கு வாய்ப்புகள் அதிகம். எனவே அருள் கூர்ந்து கவனியுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:46, 13 ஆகத்து 2016 (UTC)Reply

ஜெகதீசுவரன், இப்பட்டியலில் உள்ள பெரும்பாலான பாடல்கள் திரைப்படப் பாடல்கள் அல்ல. குறிப்பிடத்தக்கமை அற்ற ஏராளமான பட்டியல்கள் பல தமிழ் விக்கியில் உருவாக்கப்பட்டுள்ளன. அவை கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு எழுதப்பட்டவை. ஆங்கில விக்கியில் உள்ளதால் அவை இங்கும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றுடன் ஒப்பிடும் போது இப்பட்டியல் குறிப்பிடத்தக்கதே. மேற்கோள்கள் தேவை என வார்ப்புரு இடலாம்.--Kanags \உரையாடுக 01:48, 14 ஆகத்து 2016 (UTC)Reply
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி நண்பரே. சான்றில்லை என்ற வார்ப்புருவை இட்டுள்ளேன். ஈழத்துப் பாடல்கள் என்பதால் அவை குறித்தான ஊடகச் செய்திகள் தமிழ்நாட்டில் கிடைப்பது கடினம். இலங்கையில் பரவலாக ஊடகத்தில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளதா?. அவ்வாறு இல்லையென்றால் சான்றில்லை வார்ப்புருவை நீக்கி, யூடிப் காணொளிகளை கருவியாக இணைத்து கட்டுரை செம்மைப் படுத்தலாம். அத்துடன் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு உள்ளிணைப்பு தரப்படவில்லை. விக்கிப்பீடியாவில் ஏற்கனவே அவர்களைப் பற்றிய கட்டுரை இருப்பின் அந்த நபர்களுக்கு உள்ளிணைப்பினைத் தர வேண்டுகிறேன். சில நபர்களின் இன்சியல்கள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன. அவற்றையும் சரி செய்ய வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:57, 14 ஆகத்து 2016 (UTC)Reply
Return to "ஈழத்துப் பாடல்களின் பட்டியல்" page.