தலைப்பு மாற்றம் தேவை தொகு

Biomimetics க்கு உயிரீகள் ஊக்குவிக்கும் ஆக்கம் என்பது பொருத்தமாகப்படவில்லை. என்ன சொல் பயன்படுத்தலாம்?--கலை (பேச்சு) 22:12, 22 சனவரி 2019 (UTC)Reply

சரியான தலைப்பைத் தெரிவு செய்த பின்னர், பக்கத்தை வழிமாற்றலாம்.--கலை (பேச்சு) 22:23, 22 சனவரி 2019 (UTC)Reply

இப்போதைக்கு உயிரிகளை ஒத்த ஆக்கம் என்ற தலைப்புக்கு மாற்றியுள்ளேன். பொருத்தமாக இருப்பது போல் தெரிகிறது. ஆனால் ஓரிரு சொற்களில் இருந்தால் நல்லது. @செல்வா: அவர்களை அழைப்போம்.--Kanags (பேச்சு) 22:47, 22 சனவரி 2019 (UTC)Reply
இயற்கையில் உள்ளதுபோல் என்று விளக்கம் இருப்பதால் ("Biomimetic refers to human-made processes, substances, devices, or systems that imitate nature. The art and science of designing and building biomimetic apparatus is also known as biomimicry because they mimic biological systems.") இயற்கைப்போன்மி எனலாம். இயற்கைப்போன்மியாக்கம் என்றும் சொல்லலாம். வெறும் 'உயிரி'" என்றில்லாமல் (bio என்னும் சொல் இருந்தாலும்) இயற்கை என்பதை முதன்மைப்படுத்தலாம். ஏனெனில் பாறை போன்ற பலவகையான இயற்கையை ஒத்தனவாகவும் இருக்கலாம். bio என்பது முதன்மைபெறவேண்டும் வெளிப்படையாகச் சொல்லப்பட வேண்டுமெனில் உயிர்ப்போன்மி, உயிர்ப்போன்மியாக்கம் என்று சொல்லலாம். உயிரனையாக்கம் என்றும் சொல்லலாம்.--செல்வா (பேச்சு) 18:52, 6 பெப்ரவரி 2019 (UTC)
செல்வா! நீங்கள் கூறுவதுபோல் இயற்கை என்ற சொல்லையே பயன்படுத்தலாம் என நினைக்கின்றேன். போன்மி என்பதைப் போன்றது என்பதற்கான ஒத்த சொல்லாகக் கொள்கின்றீர்கள் என நினைக்கிறேன். இயற்கையொத்த ஆக்கம் என்றால் இலகுவாகப் புரிவதுபோல் தோன்றுகின்றது. நீங்கள் கூறியுள்ள உயிரனையாக்கம் என்பதுவும் Biomimetic என்பதை நேரடியாகக் குறிக்கும் இலகுவான சொல்லாகத் தெரிகின்றது. அதனையே பயன்படுத்தலாமா? ஆனால் அங்கே இயற்கையில் உள்ளவற்றை ஒத்த என்ற பொருள் வரவில்லை. உயிரனையாக்கம் அல்லது இயற்கையொத்த ஆக்கம் என்பதில் ஒன்றைத் தெரிவு செய்யலாம் எனத் தோன்றுகின்றது. @Kanags: @செல்வா:--கலை (பேச்சு) 20:17, 6 பெப்ரவரி 2019 (UTC)
உயிரனையாக்கம் என்பதில் 'இயற்கை' என்பது இல்லாதது ஒரு குறை. ஆனால் கலைச்சொல் வடிவம் ஏற்றதாக உள்ளது. இயற்கையொத்த ஆக்கம் என்பது சற்றே நீண்டு, விளக்கம்போல் உள்ளது. இயலனையாப்பு (இயல் அனைய யாப்பு) என்பதையும் கருதலாம். இது சற்றுக் கடினமாக இருப்பதாக மக்கள் உணரலாம். biomimetic என்பதும் ஆங்கிலேயருக்கு எளிதாக ஒன்றும் இல்லையே. இன்னும் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். --செல்வா (பேச்சு) 14:45, 7 பெப்ரவரி 2019 (UTC)
நன்றி செல்வா. அப்படியானால் உயிரனையாக்கம் என்றே கொள்வோம். ஆங்கிலச் சொல்லை அண்மித்ததாகவும், விளக்கத்தை உள்ளடக்கியதாகவும், சிறிய ஒற்றைச் சொல்லாகவும் இருக்கிறது. --கலை (பேச்சு) 15:26, 7 பெப்ரவரி 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உயிரனையாக்கம்&oldid=3733903" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உயிரனையாக்கம்" page.