பேச்சு:உறைபனிச்சறுக்கு

Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.

--Natkeeran 20:56, 16 அக்டோபர் 2008 (UTC)Reply

Skating, Skiing என்பன வேறானவை. சிகேடிங் என்பதை பனிச்சறுக்கு அல்லது பனிச்சறுக்காட்டம் எனலாம். காலணியின் அடிப்பக்கத்தில் இருக்கும் கத்தி போன்ற பகுதியை வாள் எனலாம். எனவே வாள்பனிச் சறுக்கு என்றும் சற்று நீட்டமாகக் கூறலாம். சுருக்கமாக இருப்பதே சிறப்பு. சிகேட்டு ( ˘ச்கேட்டு) என்னும் காலணியை வாள்பனிச்சறுக்குக் காலணி (வாள்காலணி --> வாட்காலணி) என்றும் கூறலாம். ˘ச்கீயிங் என்பதை தார்ப்பனிச் சறுக்கு (தார்ச்சறுக்கு) எனலாம். தார் என்பது காலணிகளோடு இணைக்கப்பட்டிருக்கும் தட்டையான, நீளமான தார்க்காலணியைக் குறிக்கும். பனியோடை என்றும் கூறலாம். பனிக்காலோடை, பனிக்காலோடை செல்லுதல். இறங்கு பனிக்காலோடை (downhill skiing) என்பது உயரத்தில் இருந்து கீழ்நோக்கி பனியில் சரிந்து செல்லுதல் (சரிசெலவு). செலவு = செல்லுதல், பயணம்.--செல்வா 21:32, 16 அக்டோபர் 2008 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உறைபனிச்சறுக்கு&oldid=469852" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உறைபனிச்சறுக்கு" page.