பேச்சு:உலகப் பொருளாதார நெருக்கடி, 2008-2009

பின்புலம் தொகு

ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, நிப்பான் ஆகிய நாடுகள் உயர் உற்பத்தித் திறனையும், உயர் வாழ்தரத்தையும் உடைய நாடுகள். இந் நாடுகளில் ஒரு முக்கிய தொழிற்துறை நிலமனைத் துறை. குடும்பங்கள் வீடுகளை கடனுக்கு வாங்கி தவணை முறையில் திருப்பி செலுத்துவர். நல்ல பொருளாதார சூழலில் வீட்டு விலை பொதுவாக உயரும், எனவே பெரும் தொகை வட்டி செலுத்தினாலும், பல ஆண்டுகளுக்குப் பின்பு பணத்தை கட்டி முடித்த பின்பு வீடு நல்ல பெறுமதி வாய்ந்தாக இருக்கும். இது நல்ல முதலீடுகாக கருதப்பட்டது. வீடுகளை வாங்க ஊக்குவிப்பதற்கு ஐக்கிய அமெரிக்க அரசு தவணை வட்டியின் ஒரு பகுதியை வருமான வரியில் இருந்து கழித்தது. இது வீடு கட்டுதல், விற்றல் துறையை பல காலமாக ஏறுமுகத்தில் வைத்திருந்தது. இவ்வாறு வங்கி தரகர்கள் எல்லா தரப்பட்டோருக்கும் வீடுகளை விற்க முனைந்தனர். தரமற்ற கடன்களை நுகர்வோருக்கு கடந்த 15 வருடங்களாக மேலாக வங்கிகள் வழங்கி வந்தன.

பல தரப்பட்ட வீட்டுக் கடன்களில் இருந்து வரும் தவணைக் கட்டணங்களை வருவாயாக காட்டி தொகையான கடன்களை Collateralized Debt Obligations ஆக பொதிப்படுத்தப்பட்டு முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட்டன. சந்தை ஏறுமுகமாக இருந்த போது ஒரு சில கடனாளிகள் தவணை கட்ட தவறி வீட்டை விட்டு வெளியேறுவது சிக்கலாக இருக்கவில்லை.


--Natkeeran 01:25, 5 மார்ச் 2009 (UTC)

Return to "உலகப் பொருளாதார நெருக்கடி, 2008-2009" page.