பேச்சு:எதிர்மின்னி

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
  • இலத்திரன், புரோத்தன், நியூத்திரன் ???
  • எலக்ட்ரான், ப்ரோட்டான், நியூட்ரான் ???
  • எதிர்மின்னி, நேர்மின்னி, நொதுமின்னி ???

--Natkeeran 07:04, 4 ஜூலை 2006 (UTC)

எதிர்மின்னி, நேர்மின்னி, நொதுமின்னி --ரவி 07:22, 4 ஜூலை 2006 (UTC)

மின்னன்,முன்மி,நொதுமி என்ற சொற்களைப் பின்வரும் விளக்கங்களால் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கிறேன்.

அணுகுமுறை:

அலகு பொருண்மையை ’அன்’ விகுதியால் சுட்டல்,-ஒலியன்,உறுபன் (மொழியியல்); ஒளியன் (இயற்பியல்) அணுவகத் துகள்களை ’மி’ விகுத்யால் சுட்டல்

மின்னன் (electro-மின்;+அன்) முன்மி (proto-முன்;+மி) நொதுமி (neutro-நொது;+மி) பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை 17:27 ஏப்பிரல் 2015 (UTC)

POSITRONக்கு எதிர்மின்னி சரி என தோன்றுகிறது. ELECTRON - மின்னி PROTON - முன்னி NEUTRON - நொதுமி காண்க http://www.treasurehouseofagathiyar.net/08400/8429.htm -ராஜ் (தொழில்நுட்பம் இணையம்)

ராஜ், பாசிட்ரான் (positron) என்பது மறுதலை எதிர்மின்னி. எதிர்மின்னி என்னும் சொல்லில் உள்ள எதிர் என்னும் முன்னொட்டு எதிர்மின்மத்தைக் குறிக்கும். அதே போல நேர்மின்னி என்பது புரோட்டானின் நேர்மின்மத்தைக் குறிக்க நேர் என்னும் முன்னொட்டு சேர்ந்து நேர்மின்னி ஆகியது. மின்னி என்னும் சொல் மின்மம் தாங்கிய துகள் என்பதாகும்.. --செல்வா 04:26, 27 பெப்ரவரி 2008 (UTC)

positron = positive electron; electron-மின்னன்; positron-நேர்மின்னன் எனக் கொள்ளலாம். பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை 17:33 27 எப்பிரல் 2015 (UTC)

கீழ்கண்ட சொற்களுக்கு தமிழாக்கம் தந்தால் நன்று.

QUARK - கூற்றிலி (particle with no subdivision) குவார்க்

FERMION - அரைச்சுழலி (lepton particle with 1/2 spin) (?) பெர்மியான்

BOSON - முழுச்சுழலி (lepton particle with integer spin) போசான்

QUANTUM - துளிமம் (?) துளிமி (?) குவாண்ட்டம் (அல்) குவிண்டம்

PHOTON - ஒளிமம் (?) ஒளிமி (?) ஒளியன்

NEUTRINO - மின்னிலி (?)(particle that lacks charge) நுண் நொதுமி

LEPTON - சுழலி (?) (particle with loose interaction) லெப்டான்

ION - அயனி (?) - இது ஆங்கிலத்தின் மருவு போலுள்ளது; அல்லது திமிழ் மூலத்திலிருந்து வந்ததா?

ஆம் ஆங்கிலத்தைத் தழுவி வந்ததே. இதனை மின்னணு (அல்) மின்மி (அல்) மின்மவணு எனலாம்

HADRON - அதகன் (?)- strongly interacting (அதகன் - வலுமையுடையவன்) ஹாட்ரான் (அல்) வல்லியன்

MESON - முழுச்சுழலதகன் (?)- hadron with integer spin மேசான்

GLUON - கோந்தி (?)- (glueon = glue + on) - நொதுமின்னிக்களையும் நேர்மின்னிக்களையும் பிணைக்கச்செய்யும்

கொளுவான் (அல்) ஒட்டுனி

-ராஜ் --செல்வா 16:22, 28 பெப்ரவரி 2008 (UTC)


இன்னும் சில முன்மொழிவுகள்:

BARYON - பாரி - class of heavy weight particles ; பாரம் - heavy பாரியான் (அல்) பளுனி

LEPTON - மெல்கி (?) (particle with loose interaction, leptos = lightweight) லெப்டான் (அல்)மெதுனி

MESON - இடையி(?)- hadron with integer spin, Greek meson = middleweight மேசான் (அல்) இடைனி


http://www.bartleby.com/65/ba/baryon.html

http://www.bartleby.com/65/me/meson.html

-ராஜ்

ராஜ், சில பெயர்களை அப்படியே ஏற்பது நல்லது. சில பெயர்கள், அறிவியலாளர்கள் பெயரால் வழங்குவதால் அவற்றையும் அப்படியே ஏற்பதுதான் முறை. எடுத்துக்காட்டாக, போசான் (Boson) (சத்யன் போஸ் அவர்களைப் பெருமைப்படுத்தும் பெயர்), பெர்மியான் (Fermion) (நோபல் பரிசு பெற்ற இத்தாலிய அறிவியலாளர் என்ரிக்கோ 'வெர்மி அவர்க்ளைப் பெருமைப் படுத்தும் பெயரீடு). எனவே என் பரிந்துரைகளை உங்கள் பெயருக்கு அடுத்தாற்போல இட்டுள்ளேன். மேலே பார்க்கவும். --செல்வா 16:22, 28 பெப்ரவரி 2008 (UTC)

அன்புள்ள ஐய்யா

தங்களது பரிந்துரைகள் குறிப்பாக மின்னணு (=ion) Yahoo இயற்பியல் அகராதியிலும் திருத்தி புதிப்பித்துள்ளேன். முன்னதாக electronஆக மொழிபெயர்க்கப்பட்டது,

PHOTON - ஒளியன் போல், QUANTUM - துளியன் எனலாம் என தோன்றுகிறது.

நன்றி.

ராஜ்

Baryon-அடர்மி; Lepton-தளர்மி; Meson-நண்மி (நள்=நடு);இடைமி.

Fermion-ஃபெர்மியான்; Boson-போசான்;

Quantum-குவையம்; Photon-ஒளியன்; Ion-மின்னணு;

Neutrino-நொதுமன் Hadron-வலிமி Meson-நண்மி Gluan-பசையன்

மேற்கூறிய சொற்கள் குழப்பம் ஏதுமின்றிப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கிறேன். பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை 17:55 27 ஏப்பிரல் 2015 (UTC)

@உலோ.செந்தமிழ்க்கோதை: உங்களின் கருத்தை இப்பொழுதுதான் பார்க்கின்றேன்.இலெப்டான் என்பதற்கு ஏற்கனவே மென்மி என்று ஒரு கட்டுரை உள்ளது. Fermion என்பதற்கும் பெர்மியான் என ஒரு கட்டுரை உள்ளது. நியூற்றினோ என்பதை நுண்நொதுமி எனக்குறிக்கின்றோம். கிண்டி பொறியியற்கல்லூரி இதழில் மேசான் என்பதை ஒட்டுமின்னி என்று நான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். Gluon என்பதைப் பசையன் எனலாம். குவார்க்குகளைப் பிணைக்கும் ஒரு நுண்துகள். இப்பசையன் தான் குவார்க்குகளை இணைத்து நேர்மின்னி, நொதுமி (நியூற்றான்) ஆகியவற்றை உருவாக்கத் தொழிற்படுகின்றது. வலிவிசை (strong force) என்பதற்குப்பயன்படுத்தலாம். பாசிற்றான் என்பதைக் குறுநேர்மின்னி என்றோ மறுதலை எதிர்மின்னி (anti-electron) என்றோ அழைக்கலாம். குறுநேர்மி என்றும் சுருக்கலாம். hadron என்பதை வன்மி என்று கொண்டு ஒரு குறுங்க்கட்டுரையும் உண்டு இங்க்கே. மற்ற பெயர்கள் யாவும் பொருத்தமாக உள்ளநவாகவே உணர்கின்றேன். --செல்வா (பேச்சு) 14:53, 16 சூன் 2018 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எதிர்மின்னி&oldid=2543459" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எதிர்மின்னி" page.