பேச்சு:என்றீக்கே என்றீக்கசு

Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

தொடபுடைய சில உரையாடல்களுக்கு, பார்க்க: பேச்சு:சீகன் பால்க்.


நான் வலையில் பெற்ற தகவல்கள் சற்று முரண்படுகின்றன. எழுதுங்கள் பின்னர் பிற ஆதாரங்களோடு அலசி சரிபார்க்கலாம். நன்றி. --Natkeeran 14:01, 7 அக்டோபர் 2007 (UTC)Reply

சரி, செல்வா. நான் தகவல்களை நீக்கிவிடுகிறேன். இன்னுமொரு விடயம். நீங்கள் சுட்டிய நூலில் தரப்பட்ட விடயங்கள் சற்று பயம் தருகின்றது. இதன்படி தமிழ் எழுத்துக்களையும் இலக்கணத்தையும் அவர்களே முதலில் ஆக்கியது அல்லது சீரமைத்தது போன்றல்லவா தெரிகின்றது. --Natkeeran 14:16, 7 அக்டோபர் 2007 (UTC)Reply

உண்மை எதுவோ, அதனை அறிந்து ஏற்பது நமக்கு என்றும் வளம் சேர்க்கும். தமிழ் மொழியின் இலக்கணமும், முறைமையும் குறைந்தது 1500 -2000 ஆண்டுகளுக்கு முன்னரானது. ஆனால் தமிழில் அச்சிட்டது (ஓலைச் சுவடிகள் இவைகளுக்கு மிக முந்தியது) 1554ல் தான். இது எம்மொழியின் அச்சு வரலாற்றுடன் ஒப்பிட்டாலும், முன்னணியில் (முதலில் அல்ல) உள்ளது. கூட்டன்பர்கு வேதாகமம் 1455ல் (இது முதல் அச்சு அல்ல, முதல் நகரக்கூடிய எழுத்துக்கள் உள்ள அச்சு முறைப்படி ஆக்கியது). பொதுவாக எது உண்மையோ அதனை உவந்து முன்நிறுத்த வேண்டும். தமிழின் பெருமை ஒரு சிறிதும் குறையாது. கூடவே செய்யும். என் தனிக்கருத்துக்கள்--செல்வா 14:25, 7 அக்டோபர் 2007 (UTC)Reply
பொதுவாக, உங்களது நிலைப்பாடே எனதும். இருப்பினும், ஐரோப்பிய மையவாதப் பார்வையும் நாம் இங்கு உணர்ந்து ஆயவேண்டும். தமிழ் எழுத்துக்கள் பதிப்புக்கு முன்பும் பின்பும் எவ்வள்வு மாறின போன்ற ஆய்வுகள் இருந்தால் நன்று. தமிழ் இலக்கணமும் எவ்வளவு மாற்றியமைக்கப்பட்டது பற்றி ஆய்வுகளைச் சுட்டினாலும் நன்று. அப்படி ஆய்வுகள் இருக்கின்றனவா? --Natkeeran 14:32, 7 அக்டோபர் 2007 (UTC)Reply
உண்மை நற்கீரன், ஐரோப்பிய தன்முனைப் பார்வை என்பது உள்ளது பலவிடங்களில். ஆனால் அது வேறு, அது பார்வை, தீட்டும் கோணம், அடுக்கும் சாய்வு, ஆனால் உண்மை நிகழ்வுகள் என்பது வேறு. நடுநிலைமைப் பார்வை என்பது நடுநிலைமை ஆர்வலர்கள் விழிப்பாக இருந்தால் மட்டுமே எடுபடும். இதே போல தமிழை அளவிறந்து புகழ்வோரும், அரிய முன் ஏற்றங்களை மிகைப்படுத்திக் கூறுவோரும் உள்ளனர். தமிழின் பெருமைகளைக் குறித்துக் கூறினாலும் பெருமை மிகுந்து நிற்பது. --செல்வா 15:13, 7 அக்டோபர் 2007 (UTC)Reply

இந்திய மொழிகளில் முதல் அச்சுப்பதிப்புகள் (பார்க்கவும்):

  • Tamil. Thampiraan vaNakkam (Goa, India: Henrique Henriques, 1578).
  • Bengali. Nathaniel Brassey Halhed, A Grammar of the Bengal Language (Hugli, India, 1778).
  • Hindi. A Grammar of the Hindoostanee Language (Calcutta, India: Chronicle Press, 1796).
  • Oriya. Mrtyu�jaya Bidyalankar, trans. [New Testament] (Shrirampur, India: Serampore Mission Press, 1807).
  • Malayalam. [New Testament] (Bombay, India: Courier Press, 1811).
  • Assamese. William Carey, et al., trans. [New Testament] (Shrirampur, India: Serampore Mission Press, 1813).
  • Telugu. Grammar of Telugu (Shrirampur, India: Serampore Mission Press, 1813).

இந்திய மொழிகளில் தமிழே முதலில் அச்சேறிய மொழி. அது பிற இந்திய மொழிகளை ஒப்பிடும்பொழுது 200 ஆண்டுகளுக்கு முந்தியது. ஹிந்து ஆங்கில நாளிதழில் (ஏப்ரல் 1, 2007) பாபு வர்கீஸ் எழுதிய கட்டுரையையும் பார்க்கவும்--செல்வா 04:00, 8 அக்டோபர் 2007 (UTC)Reply

Return to "என்றீக்கே என்றீக்கசு" page.