பேச்சு:எம் மகன்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by கா. சேது
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் எம் மகன் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

எம்டன் மகனா எம் மகனா--சக்திவேல் நிரோஜன் 17:27, 26 அக்டோபர் 2006 (UTC)Reply

இங்கே பார்க்கவும் --Sivakumar \பேச்சு 19:02, 26 அக்டோபர் 2006 (UTC)Reply

http://www.nowrunning.com/CGI-BIN/film/Emttan%20Mahan.asp இங்கேயும் காண்க அத்தளத்தில் எம்டன் மகனைச் சுருக்கிப் போட்டுள்ளனர்.ஏனெனில் இத்திரைப்படத்தைப் பார்த்த நான் அங்கு எம்டன் மகன் என்றுதான் தலைப்பைப் பார்த்தேன்.--சக்திவேல் நிரோஜன் 19:46, 26 அக்டோபர் 2006 (UTC)Reply

தமிழில் பெயர் வைத்தால் தமிழ்நாட்டில் வரிவிலக்கு கிடைக்கும் என்ற காரணத்துக்காக அண்மையில் நிறையத் தமிழ்த்திரைப்படங்கள் கடைசி நேரத்தில் பெயர் மாறின. (சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்) உனக்கும் எனக்கும், (ஜில்லுனு ஒரு காதல்) சில்லுனு ஒரு காதல், (எம்டன் மகன்) எம் மகன் ஆகியவை இதில் அடங்கும். எனினும் நீண்ட நாட்களாக வேறு பெயர்களிலேயே இவை அறியப்பட்டு வந்ததால் பழைய பெயரே மக்கள் மத்தியில் நிலைத்துள்ளது. விளம்பரத் தட்டிகளிலும் முறையாகப் பெயர் அச்சிடப்படவில்லை. படம் தொடங்குவதற்கு முன் காட்டப்படும் தணிக்கைச்சான்றிதழில் உள்ளது தான் அதிகாரப்பூர்வப் பெயர். மேற்கண்ட படங்களுக்கு யாராவது இந்த விவரங்களை உறுதி செய்ய இயலுமானால் நன்றாக இருக்கும். --ரவி 22:41, 26 அக்டோபர் 2006 (UTC)Reply

நான் இத்திரைப்படம் பார்த்தேன் அதில் எம்டன் என்பது கிருஷ்ணனின் தந்தையின் பெயர் அதாவது நாசரின் பெயர் அதனால் அது ஆங்கிலப்பெயராக இருக்க வாய்ப்பில்லை.மேலும் எம்டன் மகன் எனவே திரைப்பட ஆரம்பத் தலைப்பிலும் கண்டேன்.மேலும் இதில் ஆட்சேபனை ஏதேனும் இருந்தால் தெரிவியுங்கள்.--சக்திவேல் நிரோஜன் 02:29, 27 அக்டோபர் 2006 (UTC)Reply

நான் கொடுத்திருந்த சுட்டியின் முதல் பத்தியில் பெயர் மாற்றத்திற்கான காரணத்தைக் கொடுத்துள்ளனர். அதனால் தான் அந்த சுட்டியைக் கொடுத்தேன். (The film has been renamed as Em Magan from Emttan Magan at the last moment to attract tax concession) --Sivakumar \பேச்சு 05:30, 27 அக்டோபர் 2006 (UTC)Reply

எம்டன் என்பது இரண்டாம் உலகப் போரில் சென்னையில் குண்டு போட்ட ஒரு கப்பலின் பெயர். அதற்குப் பிறகு, அடுத்தவரை நடுங்கச் செய்யும் ஆட்களுக்கு எம்டன் என்று பட்டப்பெயர் சூட்டும் வழக்கம் வந்ததாம் (பேட்டி ஒன்றில் இப்படத்தில் இயக்குனர் திருமுருகன் சொன்ன தகவல்..ஆனால். தற்பொழுது தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு இநதப் பேர் விளக்கம் இல்லாமல் புரியும் என்பது கேள்விக்குறி.)..படத்தில் கிருஷ்ணனில் தந்தை இப்படி அடுத்தவரை அடக்கி ஒடுக்குவதால் அனைவரும் அவருக்கு எம்டன் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். ஆனால், அது அவரது பெயர் இல்லை. படத்தில் அது குறிப்பிடப்படவும் இல்லை. படம் வெளியாவதற்கு ஓரிரு நாள் முன்னர் தான் பெயர் மாற்றினார்கள். அதனால் படத்தலைப்பில் எம்டன் என்று இருந்தால் ஆச்சரியமில்லை. யாராவது படம் reelல் என்ன பேர் வருகிறது என்று சொன்னால் நன்றாக இருக்கும்.--ரவி 09:39, 27 அக்டோபர் 2006 (UTC)Reply

ஓகோ இப்போது புரிகிறது எது எப்படியாயினும் பெயர் சரியாக இருந்தால் சரி.--சக்திவேல் நிரோஜன் 14:24, 27 அக்டோபர் 2006 (UTC)Reply

ரவி இரண்டாம் உலகப் போரில் எனக் குறிப்பிட்டுள்ளது தவறு. சென்னையைத் தாக்கியதும் இந்தியப் பெருங்கடலில் பல பிரித்தானிய- அவுஸ்திரேலிய துறைமுகங்களைக் கலக்கியதும் கூட்டு அணியினரது கப்பல்களைத் தாக்கி சூறையாடியதும் முதலாம் உலகப் போரின் போது யேர்மனியர்கள் பயன்படுத்திய (1908 இல் ஆக்கப்பட்ட) எம்டன் போர்க் கப்பல்தான். http://en.wikipedia.org/wiki/SMS_Emden_%281906%29 கா. சேது 06:52, 6 சூன் 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எம்_மகன்&oldid=3211867" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எம் மகன்" page.