பேச்சு:எலிக்கோபேக்டர் பைலோரி
குடற்புண்ணுக்குச் சான்றாக கீழ்க்காணும் தரவுகள் உதவுமா என்று மரு. கார்த்தி அவர்களோ மரு. செந்தி அவர்களோ முடிவு செய்ய வேண்டும்:
- http://www.cellsalive.com/helico.htm
- Boyanova, L (editor) (2011). Helicobacter pylori. Caister Academic Press. ISBN 978-1-904455-84-4. *http://www.annals.org/content/116/9/705.short
- http://www.nejm.org/doi/pdf/10.1056/NEJM199302043280503
இவை தவிர PETERSON WL, GRAHAM DY, MARSHALL B, BLASER MJ, GENTA RM, KLEIN PD, STRATTON CW, DRNEC J, PROKOCIMER P, SIEPMAN N, "CLARITHROMYCIN AS MONOTHERAPY FOR ERADICATION OF HELICOBACTER-PYLORI - A RANDOMIZED, DOUBLE-BLIND TRIAL" AMERICAN JOURNAL OF GASTROENTEROLOGY Volume: 88 Issue: 11 Pages: 1860-1864 Published: NOV 1993 என்னும் ஆய்வுக்கட்டுரையும், மார்சல் அவர்கள் எழுதிய Marshall B, "Helicobacter pylori: 20 years on" , CLINICAL MEDICINE Volume: 2 Issue: 2 Pages: 147-152, MAR-APR 2002 என்பதும் பரவலாகச் சுட்டப்படும் ஆய்விதழ் கட்டுரைகள்.
--செல்வா 19:21, 15 ஏப்ரல் 2011 (UTC)
இக்கட்டுரையின் தலைப்பு எலிக்கோபேக்டர் பைலோரி என்று இருபதும் நல்லது. கோ என்னும் எழுத்துக்கு முன்னே க் இருக்க வேண்டும், முதல் பகுதி எலிக்கோ- என்று இருப்பது தவறு இல்லை. கட்டாயம் காற்றொலி ககரம்தான் வர வேண்டும் எனில் ஃகெலிக்கோபேக்டர் பைலோரி என்றும் எழுதலாம். --செல்வா 19:25, 15 ஏப்ரல் 2011 (UTC)
இக்கட்டுரை நன்றாக வளர்தெடுக்கப்படும்போது நிச்சயம் இத்தகைய சான்றுகள் தேவை. நீங்கள் கொடுத்த தொடுப்பில் triple therapy (எவ்வாறு தமிழில் கூறலாம்? அதாவது மூன்று வெவ்வேறு மருந்துகள் சேர்த்து Hpக்கு கொடுக்கும் சிகிச்சை.) பற்றிய abstract நன்று, சான்றாக எடுக்கலாம் என்றே கருதுகின்றேன் (முழுமையாகப் படிக்கவில்லை, எனினும் மேலோட்டமாகப் பார்த்ததில்...)
- பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள் செல்வா.
எலிக்கோபேக்டர் பைலோரி என்றும் கொடுத்து அதற்கு ஒரு ஃகெலிக்கோபேக்டர் பைலோரி வழிமாற்றம் உருவாக்கலாம்.
--சி. செந்தி 19:41, 15 ஏப்ரல் 2011 (UTC)
Triple therapy - மும்முனை மருந்திடல்??
__Nan
செந்தி, முத்தீர்வு அல்லது முத்தீர்வுமுறை எனலாம். பயனர் நந்தகுமார் (பயனர்:Nan) கூறியவாறு மும்முனை மருத்துவமுறை எனலாம். அகட்டுரையில் சொல்லியவாறு நோயாளிகளிக்கு ரானிட்டிடைன் 300 மில்லிகிராம் (ranitidine, 300 mg), அல்லது ரானிட்டைடினோடு மும்மருந்து தருமுறையையும் கைக்கொள்வதைப் பற்றிக் கூறுகிறார்கள். இந்த மும்மருந்து முறை என்பது இக்கட்டுரையில்[1] (1) டெட்ராசைக்ளின் 2 கி (tetracycline, 2 g); (2) மெட்ரோனிடாசோல் 750 மில்லிகிராம் (metronidazole, 750 mg); (3) பிசுமத் சப்சாலிசைலேட்டு 5 அல்லது 8 மாத்திரை (ஒவ்வொரு மாத்திரையும் 151 மில்லிகிராம்) (bismuth subsalicylate, 5 or 8 tablets (151 mg bismuth per tablet)) ஆகிய மூன்று மருந்துகளையும் சேர்த்து இருகிழமைகளுக்குக் கொடுப்பதைப் பற்றிப் பேசுகின்றது. (தொடர்ந்து 16 கிழமைகளுக்கு ரானிட்டிடைன் (ranitidine) தருவது பற்றியும் பேசுகின்றது. ஆகவே மும்மருந்துமுறை என்று இங்கே சுருக்கமாகக் கூறலாம் என்று நினைக்கின்றேன். --செல்வா 21:02, 15 ஏப்ரல் 2011 (UTC)
Start a discussion about எலிக்கோபேக்டர் பைலோரி
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve எலிக்கோபேக்டர் பைலோரி.