பேச்சு:எ.கா

எடுத்துக்காட்டு வேறு உதாரணம் வேறா?--கலாநிதி 17:28, 18 பெப்ரவரி 2007 (UTC)

இரண்டும் ஒன்றே. உதாரணம் தமிழகத்தில் பயன்படுவது குறைவு என நினைக்கிறேன். மேலும் உதாரணத்தைச் சுருக்கமாக எழுதும் போது உ-ம் என்று எழுதுவதே பொருத்தமானது. --கோபி 17:34, 18 பெப்ரவரி 2007 (UTC)
எடுத்துக் காட்டு என்பது தமிழ், உதாரணம் என்பது வடமொழியில் இருந்து தமிழில் வழங்கும் கடன் சொல். உதாரணம் என்று எழுதுவதில் தவறில்லை. பிறமொழிக் கடன் சொற்களைத் தமிழில் ஆளுவதையும் நான் எதிர்க்கவில்லை. ஆனால் கூடியமட்டிலும் தமிழ்ச்சொற்கள் ஆளுவதை (குறைந்த மட்டிலும் பெரும்பாலான இடங்களில்) நான் விரும்புகிறேன். எடுத்துக் காட்டு அல்லது காட்டு என்னும் சொற்கள் தமிழ்நாட்டில் பரவலாக பயன்பாட்டில் உள்ளன. உதாரணமும் பரவலாக ஆளப்படுகின்றது (தமிழ் நாட்டில்). --செல்வா 17:38, 18 பெப்ரவரி 2007 (UTC)

உதாரணம் என்றாலும் தமிழ்நாட்டில் புரியும். ஆனால், உதாரணம் தமிழ்ச் சொல் இல்லை என்று நினைக்கிறேன். தமிழ்ப் பாடப்புத்தகங்களில் எடுத்துக்காட்டு என்ற சொல்ல பயன்பாட்டில் உள்ளது.--Ravidreams 17:39, 18 பெப்ரவரி 2007 (UTC)

உதாரணம் என்பது இலங்கையில் பரவலாகப் பயன்படுவதுதான். ஆயினும் எடுத்துக்காட்டு நல்ல சொல். விளங்கிக் கொள்வதிலும் சிக்கல்கள் இல்லை. ஆதலால் எ.கா இனையே த.வி.யில் பயன்படுத்துவது நல்லது. --கோபி 17:49, 18 பெப்ரவரி 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எ.கா&oldid=104947" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எ.கா" page.