பேச்சு:ஒளிமின்னழுத்தியம்
ஒளிவேற்றியல், ஒளிமின்னியல் !! --Natkeeran 22:26, 11 ஆகஸ்ட் 2009 (UTC)
சில பரிந்துரைகள்:
- கதிரொளி மின்கலம் = solar cell
- கதிரொளி மின்படல், கதிரொளி மின்படலை, கதிரொளி மின்படலம் = solar panel
- ஒளிமின் விளைவு = photoelectric effect
- ஒளிமின்னழுத்தக் கருவி = photovoltaic device
- ஒளிமின்னழுத்தியம் = photovoltaics, photovoltaic system, PV
- சுற்றுவெட்டு மின்அழுத்தம் = open circuit voltage;
- சுருக்குசுற்று மின்னோட்டம் = short-circuit current
- அடைகெழு = fill factor
- ஓளிமின்னியல், ஒளிமின்னியியல் = optoelectronics
- ஒருங்கிணைந்த ஒளிமின் சுற்றுகள் = Optoelectronic integarated circuits(OEIC)
- ஒளிமின் இருமுனையம் = photodiode
- ஒளியுமிழ் இருமுனையம் = Light Emitting Diode (LED)
- சீரொளி இருமுனையம், = Laser diode
- அகச்சிவப்புக் கதிர் இருமுனையம் = Infrared Diode
- ஒளியுணர்வி = photodetector, ஒளியுணர் இருமுனையம் = photo detector (diode)
--செல்வா 02:15, 12 ஆகஸ்ட் 2009 (UTC)
செதிழ் என்று ஒரு சொல் இருப்பதாகத் தெரியவில்லை. செதிள், செதில் என்பதைத்தான் செதிழ் என்று எழுதியுள்ளார் என நினைக்கிறேன். ஒளிமின் செதிள் என்று கூறலாம், ஆனால் செதிள் என்பதைவிட படலம், படல், படலை என்னும் சொற்கள் panel என்பதற்குப் பொருத்தமாக இருக்கும். panel என்பதைத் தட்டு அல்லது ஏடகம் என்றும் கூறலாம். Solar (light) என்பதைக் கதிரொளி என்று கூறுவது பொருத்தமானது. --செல்வா 02:29, 12 ஆகஸ்ட் 2009 (UTC)
- இருமுனையம் என்பது நல்ல சொல் என்றாலும் இன்னும் சுருக்கமான சொல் இருப்பது நல்லது. ஈரி என்னும் சொல்லை ஆளலாம். மேலும் ஈர்தல் என்றால் பிரித்தல் (குறிப்பாக நுட்பமாய், நுண்மையாய்ப் பிரித்தல்) என்னும் பொருளும் இருப்பதால். ஈரி (= இரண்டு, ஈர்க்கும் கருவி) என இருபொருள்பட இருமுனையத்துக்குப் பயன்படுத்தலாம். மின் என்னும் முன்னொட்டோடும் எளிதாக புணரும். மின்னீரி (electrical/electronics diode). ஒளிமின்னீரி = photodiode. --செல்வா 02:44, 12 ஆகஸ்ட் 2009 (UTC)
நன்று . இவ்வகை சொற்கள் நானாக தேர்த்து எடுத்த சொற்கள் . ஆகையால் அந்த சொற்கள் சில நேரங்களில் தான் உணர்த்த வேண்டிய பொருளை சரியாக உணர்த்தவில்லை என்பதை யாம் அறிவோம். நீங்கள் பரிந்துரைத்த சொற்கள் சரியாய் பொருள் உணர்த்து வகையில் இருக்கிறது. எனினும் இதை தொடர்ந்து ஆய்வு செய்து நாம் இதனை மாற்றி அமைக்க வேண்டும் . மேலும் செதிழ் என்பதை செதிள் என்று மாற்றி அமைக்க தங்களை வேண்டுகிறேன் . ஏனெனில் எனக்கு தலைப்பை மாற்றியமைக்க தெரியாது . செதிள் என்பது நான் cell என்ற சொல்லிர்க்காக பயன் படுத்தியது .இந்த துறைகளில் cell , panel , module என்று மூன்று சொற்கள் அடிகடி பயன்படுத்துவர்கள். ஆகையால் முதலில் இம்மூன்று சொற்க்களுக்கும் ஒரு இனிமையான சொற்க்களை தேடுவது நன்று . மேலும் உரையாடல் தொடரும் .
- செதிள் என்னும் சொல் அவ்வளவு பொருத்தமானதல்ல. ஒளிமின்கலம் (solar cell) என்பது வழக்கில் உள்ளது. மின்கலம் என்பது electric (battery) cell; இதுவும் வழக்கில் உள்ளது. நான் பரிந்துரைப்பது கதிரொளி மின்கலம். Module என்பதும் Panel என்பதும் ஒன்றுதான். கதிரொளி மின்படல் (/படலை/படலம்/தட்டை) என்பது PV Panel/module என்பதற்குப் பயன்படுத்தலாம். நானும் இத்துறையைச் சேர்ந்தவன் தான். என் முனைவர் பட்ட ஆய்விலும் ஒரு பகுதி கதிரொளி மின்கலங்களைப் பற்றியது. இத் துறை பற்றிய எல்லா நுணுக்கங்களையும் மிகத் தெளிவாகத் தமிழில் எழுத இயலும். --செல்வா 04:31, 12 ஆகஸ்ட் 2009 (UTC)
நன்று . நீங்கள் இந்த துறையை சேர்த்தவர் ஆகையால் நீங்கள் இந்த கட்டுரை மற்றும் இது தொடர்பான கட்டுரையை விரைவில் திருத்து எழுதுவீர்கள் என்று நான் நம்புகிறேன் .மேலும் இந்த ஒளிமின்கலம் தயாரிக்கும் முறைப்பற்றி நான் எழுத முயற்சி செய்திருக்கேன். அதில் இருக்கும் TiO2 , SnO2 முதலியவற்றை ITO substarte இவைகளை எல்லாம் நீங்கள் எழுதும் படி கேட்டுகொள்கிறேன். மேலும் நானும் இந்த துறையை சேர்த்திருந்தாலும் என் அனுபவம் மிக குறைவு . ஆகையால் நான் எழுதும் கட்டுரைகளை சற்றும் தவறுகள் இருந்தால் திருத்தி எழுதும் படி கேட்டு கொள்கிறேன். பல்படிகத் திண்மம் என்று ஒரு கட்டுரை கண்டேன் . அதிலும் ஒளிமின்கலம் என்று குறிப்பிட்டுள்ளது .
photo , photon , opto ,optic , optical , solar , substrate போன்ற சொற்களுக்கு தமிழ் சொற்க்களை எனக்கு தர வேண்டும் .−முன்நிற்கும் கருத்து Inbamkumar86 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- செல்வா . photovoltaic என்ற சொல்லின் பொருள் முழுமையாக ஒளிமின்னழுத்தியம் என்ற சொல்லில் வெளிப்படுகிறது .ஆயினும் இச்சொல் மூன்று வேர்ச் சொற்களால் அமைந்ததாக இருக்கிறது. ஆங்கிலச்சொல்லில் இரு வேர்ச்சொற்கள் மட்டுமே இருப்பதால் தமிழிலும் இரு வேர்ச் சொற்களால் அமைந்தால் நல்லதென்று எமக்கு தோன்றுகிறது .−முன்நிற்கும் கருத்து Inbamkumar86 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
Voltage என்பதைத் தமிழில் மின்னழுத்தம் என்கிறோம். வோல்ட்டழுத்தம் என்றும் கூறலாம். Electrical potential (difference) என்பதைத்தானே அப்படிக் குறிக்கிறார்கள். தமிழில் தெளிவாகப் பொருள் விளங்க வேண்டும், கூடியமட்டிலும் சுருக்கமாகவும் இருக்க வேண்டும். இதுவே குறிக்கோள். photovoltaic என்பதைத் தமிழில் ஒளிவோல்ட்டியம் எனலாம், ஆனால் சிறப்பான பொருள் சுட்டு இல்லை. கதிரொளி மின்னழுத்தியம் என்பதே சுட்டப்படும் பொருள். கதிரொளியை ஒளி என்று வேண்டுமானால் பொதுமைப்படுத்தலாம். ஆனால் மின்னழுத்தம் என்பதை ஒரே சொல்லாக நினைப்பது நல்லது. ஆங்கிலத்திலும் voltaic என்பதில் volta + ic உள்ளது. ஒளிமின்னழுத்தியம் என்பதின் பொருள், ஒளிமின்னழுத்தம் தரும் இயக்கம்/அமைப்பு என்று பொருள். பின்னொட்டாகிய -இயம் என்பதும் பொருள் தருவது. மேலும் நீங்கள் மேலே கேட்ட பல சொற்களுக்கான இணைகள்:
- photon = ஒளியன் (ஒள்ளி)
- photo- = ஒளி-
- opto-, optic-, optical- = ஒளி- (காணொளி (visible light) என்பது பொருள் ஆனால் பொருள் நீட்சி பெற்று காணொளி மீறிய அலைநீளங்கள் கொண்ட மின்காந்த அலைகளுக்கும் பயன்படுகின்றது. எ.கா. optical fiber = ஒளிநார். ஆனால் ஒளிநாரின் அச்சுப்பகுதியில் செல்லும் மின்காந்த அலைகள் காணொளி மாலைக்கு அப்பாற்பட்டவை. அகச்ச்சிவப்புக் கதிர் அலைநீளங்கள் கொண்டவை. எனினும் காணொளியை ஒட்டிய அலைநீளங்கள் கொண்டவை என்னும் நீட்சிப் பொருளில் ஒளிநார் என்கிறோம். (இங்கு காணொளி என்பதை visibile light என்னும் பொருளில் ஆள்கிறேன். இணைய உலகில் சிலர் நிகழ்படம் (video) என்பதற்கு ஈடாக காணொளி என்னும் சொல்லைப் பயன்படுத்துகின்றார்கள்)
- solar = கதிரொளி, கதிரவ-, பகலவ-, சூரிய-
- substrate = அடிமனை
- TiO2 = டைட்டானியம் டை-ஆக்சைடு
- SnO2 = வெள்ளீய ஈராக்சைடு, வெள்ளீய-டை-ஆக்சைடு
- ITO substarte = இண்டியம் டின் ஆக்சைடு அடிமனை, இண்டிய வெள்ளீய ஆக்சைடு அடிமனை
--செல்வா 16:19, 12 ஆகஸ்ட் 2009 (UTC)
- புகைப்படம் என்று சொல்கிறார்களே அதன் பொருள் என்ன . −முன்நிற்கும் கருத்து Inbamkumar86 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
புகைப்படம் என்றால் photograph, அல்லது ஒளிப்படம். --Natkeeran 23:16, 12 ஆகஸ்ட் 2009 (UTC)
- photon - ஒளியணு, ஒளியணுவியல் --Natkeeran 23:16, 12 ஆகஸ்ட் 2009 (UTC)
ஓளியன் என்பது வழக்கில் உள்ள சொல். அ.கி. மூர்த்தியின் அறிவியல் அகராதியைப் பாருங்கள். விக்சனரியையும் பாருங்கள். நாங்கள் 1968-1970களில் இருந்து பயன்படுத்திக்கொண்டு வருகின்றோம். ஒளியனியல், ஒளிமின்னியல் என்றும் தொடர்பான துறைகளைக் கூறலாம். --செல்வா 02:51, 13 ஆகஸ்ட் 2009 (UTC)
ஒளிமின்னழுத்தியல்
தொகுஇயங்கள் பொதுவாக ism என்பதற்கே பெரும்பாலும் இணையாக வருகிறது. இங்கு ஒளிமின்னழுத்தியல் கூடப் பொருந்தும். --Natkeeran 23:17, 12 ஆகஸ்ட் 2009 (UTC)
- அப்படியில்லை நற்கீரன். இயம் என்னும் பின்னொட்டை இயல் சார்ந்த ஒன்றுக்கும், கருத்துருவைக் குறிக்கவும் பயன்படுத்தலாம். கருத்தியம் என்பது தியரி என்னும் பொருள் கொண்டது. இயம் என்பதை இசம் என்பதோடு நெருக்கமாக பிணைத்துக்கொள்ள வேண்டாம். இசம் என்பதற்கும் -logy, -ics முதலியவற்றுக்கும் பயன்படுத்தலாம். இசைக்கருவிக்கு வாத்தியம், வாச்சியம் என்பதில் உள்ளதும் இயம்தான். பண்ணியம் என்னும் சொல் இசைக்கருவிக்கும், விற்கப்படும் பொருளுக்கும் வழங்கும் சொல். அதாவது இயல், இயம் ஆகிய இரண்டையும் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தலாம்.--செல்வா 02:34, 13 ஆகஸ்ட் 2009 (UTC)