பேச்சு:ஒளியிழை
பிரயோக அறிவியல் என்பதை பயன்பாட்டு அறிவியல் எனலாம் என என்னுடைய கருத்து.
-- மகிழ்நன் 17:11, 11 ஆகஸ்ட் 2009 (UTC)
- பயன்பாட்டு அறிவியல் எளிதாக இருக்கிறது. மகிழ்நனுடைய கருத்தினை நானும் ஆதரிக்கிறேன்.--சிவக்குமார் \பேச்சு 18:56, 11 ஆகஸ்ட் 2009 (UTC)
கலைச்சொற்கள்
தொகுcore - அச்சுள் cladding - உறை , ஒளியிழை உறை
Step index - ????????
Graded Index - ???????????
- Step index படி(மாற்ற) (விலகு)சுட்டெண்
- Graded index - சீர்மாற்ற (விலகு)சுட்டெண்
இவை வழக்கத்தில் படிமாற்றச் சுட்டெண், சீர்மாற்றச் சுட்டெண் என குறிப்பிடப்படலாம். சீர்மாற்றச் சுட்டெண் என்பது ஒளிவிலகுச் சுட்டெண் திடீர் என்று மாறாமல் சீராக சிறுகச்சிறுக மாறும் அமைப்பு கொண்டது. படத்தை இட்டு விளக்கினால் தெளிவாக விளங்கும். --செல்வா 19:42, 31 மார்ச் 2010 (UTC)
இன்பகுமார், இக்கட்டுரையெய் அருமையாக செதுக்கி உள்ளீர்கள்.
வாழ்த்துகள்.
-- மகிழ்நன் 21:50, 1 ஏப்ரல் 2010 (UTC)
- தங்கள் ஊக்கத்திற்கு நன்றி திரு. மகிழ்நன் . விக்கி பற்றி எனக்கு கல்லூரி படிக்கும் போதே தெரியாமல் போயிற்று . - - இராஜ்குமார் 11.59 ரியாத் , 02 ஏப்ரல் 2010.