பேச்சு:ககுட்சூசி

カグツチ என்பதை ககுச்சி என எழுத்துப் பெயர்க்கலாம். இங்கு வரும் கு என்பதை gu என உச்சரிக்க வேண்டும்.

ツ கனா ட்ஸு எனும் ஒலி அல்லவா ? இதை உறுதிபடுத்த TTS இலும் போட்டு கேட்டேன். அது ககுட்ஸுசி என படித்தது. ககு என்பது தமிழில் kagu என்றே வரும் அதில் ஒலிப்பு பிழை வருவதில் வாய்ப்பு இல்லை. க இரட்டிக்கும் போதுதான் அது ka ஆகிவிடும். வினோத் 09:01, 23 டிசம்பர் 2007 (UTC)

カグッチஉள்ளது போல ட்ஸு Miniature ஆக வரும் போது தான் ஒலியை இரட்டிக்க வேண்டுமென படித்திருக்கிறேன். カグツチ இல் ட்ஸு முழு வடிவில் தானே உள்ளது. வினோத் 09:52, 23 டிசம்பர் 2007 (UTC)

ஆம் நீங்கள் கூறுவது சரியே. ツチ என்பதை ட்சுச்சி என எழுதலாம் தானே.チ என்பதை chi என ஒலிக்க வேண்டும். ட்ஸுசி என எழுதினால் இது வராது. மேலும் ஸு என்பதை தவிர்க்கலாம்.--டெரன்ஸ் \பேச்சு 13:36, 23 டிசம்பர் 2007 (UTC)

ட்சு என எழுதும் போது தமிழ் மரபின் படி tchu என ஒலிக்க வாய்ப்புண்டு. எனவே தான் அவ்வாறு எழுதினேன். மேலும் வார்ப்புரு:ஜப்பானிய புராணக்கதைகள் பேச்சுப்பக்கத்தையும் பார்க்க வேண்டுகிறேன். [சிறப்பு:Contributions/121.247.215.235|121.247.215.235]] 13:41, 23 டிசம்பர் 2007 (UTC) முன் கையொப்பமிட்டது வினோத்

ட்சுசி என்பதை விட ட்ஸுசி என்பது tsuchi என ஒலிப்பு தரும் என எண்ணுகிறேன். நான் சுசி என்பதை susi என்றே படிக்கிறேன். மேலும் தமிழகத்தில் சுசி கணேசன் என்ற இயக்குனர் உண்டு :-). எனவே பலரும் susi என படிக்க வாய்ப்புண்டு வினோத் 13:55, 23 டிசம்பர் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ககுட்சூசி&oldid=2097488" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ககுட்சூசி" page.