பேச்சு:கருத்தடை உறை

நல்ல கட்டுரை. தமிழ்நாட்டில் உடலுறவு என்று சொல்வது தான் வழமை. பாலுறவு என்று சொல்வது குறைவு என்று நினைக்கிறேன். எது பொருத்தம்?--Ravidreams 11:52, 3 மார்ச் 2007 (UTC)

கூகிள் செய்ததில் தமிழகத்திலும் பாலுறவு விளங்கிக் கொள்ளக் கூடிய சொல்லாகவே படுகிறது. உடலுறவு ஈழத்திலும் அதிகம் பயன்படும் சொல்தான். ஆனால் sexual intercourse என்பதை உடலுறவு என்று சொல்வதை விடப் பாலுறவு என்பது பொருத்தம்போற் பட்டது. எடுத்துக்காட்டுக்கு oral sex என்பதை வாய்வழி உடலுறவு என்று சொல்வதைவிட வாய்வழிப் பாலுறவு என்று சொல்வது அதிகம் பொருத்தம் போலும் உள்ளது. பாலியல், பால்வினை என்பவற்றோடு இணைந்ததாக பொருள்விளங்குமாறு இருப்பதால் பாலுறவு என்பதைப் பயன்படுத்தினேன். இது என் தனிப்பட்ட கருத்தே. இந்தப் பேசாப்பொருளில் எழுதப்பட இன்னும் கட்டுரைகள் இருப்பதால் பாலுறவு என்பதைத் தொடர்ந்து பாவிப்பது பொருத்தமற்றதெனின் தெரிவிக்கவும். நன்றி. --கோபி 12:10, 3 மார்ச் 2007 (UTC)

உங்கள் வாதம் சரியே. பாலுறவு என்றே எழுதலாம். பாலுறவு என்றாலும் எல்லா நாட்டவரும் புரிந்து கொள்வார்கள்.--Ravidreams 13:21, 3 மார்ச் 2007 (UTC)

கட்டுரை இணைப்புக் கோரிக்கை தொகு

இந்தக் கட்டுரையின் தலைப்பை கருத்தடை உறை என மாற்ற வேண்டும். காரணம் இது Condom ஆங்கிலக் கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஆணுறை, பெண்ணுறை இரண்டுமே உள்ளன என்பதனால் கருத்தடை உறை என்பதே பொருத்தமாக இருக்கும். எனவே இந்தக் கட்டுரையை கருத்தடை உறை என்பதுடன் இணைத்து அதனையே தலைப்பாகக் கொள்ளலாம். ஆணுறை என்பதற்கு ஒரு வழிமாற்றை விட்டுச் செல்லலாம். --கலை (பேச்சு) 08:45, 10 பெப்ரவரி 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கருத்தடை_உறை&oldid=2534390" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கருத்தடை உறை" page.